Home » தொடரும் » Page 44

Tag - தொடரும்

திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 15

15 – கட்டவிழ்ந்த சமூகம் மன்னராட்சிக்குப் பிறகு, எழுபதாண்டுகள் கடந்திருந்தன. இனி சோவியத்தின் கட்டமைப்பில் திருத்தங்கள் செய்து பயனில்லை. முழுவதுமாக மாற்றியெழுத வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார் கர்பச்சோவ். அத்தனை எளிதாகச் செய்துவிட முடியுமா…? எப்படி இருந்தது சோவியத்தின் கட்டமைப்பு? கம்யூனிசக்...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 15

பதினேழு வருட கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை மீட்டிப் பார்த்தால் தெரியும்.சர்வதேசத்தில் இலங்கையை நரமாமிசம் சாப்பிடும் அகோரிகள் வாழும் தேசம் போல மாற்றிவிட்டுத்தான் அதன் தலைவர்கள் ஓய்ந்து போனார்கள்.உலகத்திற்கு அதிகளவில் அகதிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாய்ப் போனது இலங்கை. அரச வளங்கள்...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 9

விஷத்தினும் கொடியது பயம்! கீதா மட்டும்தான் அந்த நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கினாள். வெறிச்சென்றிருந்தது. அங்கிருந்து பத்துநிமிட நடையில் அவளது வீடு. எப்போதும் எட்டு மணியாகிவிடும். ஆனால் இன்றைக்கு ஐந்தரை மணிக்கே வந்துவிட்டாள். மாலை வெயிலைப் பார்ப்பதே அவளுக்குப் புதிதாக இருந்தது. தனியார்...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 14

14 – பேரழிவு கற்றுத்தந்த பாடம் நிலையான ஆட்சி என்பதே சோவியத்தின் உடனடித் தேவையானது. நாட்டின் தேக்க நிலையைச் சரிசெய்யுமளவு, இறந்துபோன குறுகியகால அதிபர்களுக்கு நேரமிருக்கவில்லை. நல்ல வேளையாக இப்பதவிக்குப் பொருத்தமானவர், ஏற்கெனவே செயல்படத் தொடங்கியிருந்தார். மிகைல் செர்கேயவிச் கர்பச்சோவ் (1985-1991)...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 8

சாஃப்ட்வேர் குட்டிச்சாத்தான் ஊர் சுற்றுவது என்றால் ஜெயபாலுக்குக் கொஞ்சமும் பிடிக்காது. எங்கெங்கோ பயணங்கள் போய் இன்ஸ்டாவிலும் ஃபேஸ்புக்கிலும் ரீல்கள் போடுபவர்களைப் பார்க்கும்போது அவருக்கு ஆச்சரியமாக இருக்கும்- எரிச்சலாகவும். தவிர்க்கவே இயலாது என்றால் மட்டுமே ஜெயபால் பயணம் செய்வார். வீட்டைவிடச்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 83

83 புத்தகம் போட்டுப் பார் கல்யாணம் பண்ணிப் பார்! வீட்டைக் கட்டிப் பார்! என்று அனுபவஸ்தர்கள் சிரித்துக்கொண்டே தீவிரமாகச் சொல்வதைப்போலப் புத்தகம் போட்டுப் பார்! என்பதற்கு அவனே உதாரணமாக ஆகப் போகிறான் என்பதை, ஆரம்பிக்கும்போது அவன் உணர்ந்திருக்கவில்லை. எல்லாவற்றையுமே கடந்துவந்தபின் எவருடையதோபோல்...

Read More
தொடரும் வான்

வான் – 18

ஒரு தக்காளிப் பழம் காணாமல் போய்விட்டது. “என்னது, தக்காளியக் காணோமா?” தகவல், உலகச் செய்திகளின் பேசுபொருளாகிவிட்டது. விண்வெளியில் இயங்கும் ‘சர்வதேச விண்வெளி நிலையத்தில்’ பயிரிடப்பட்டு, அறுவடை செய்தெடுத்த அரும்பெரும் தக்காளிப் பழம் போன இடமே தெரியவில்லை. ஃப்ரான்க் ரூபியோ என்கிற விஞ்ஞானி , கிளி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 86

86. ராட்கிளிஃப்பின் சூழ்ச்சி இந்தியாவைக் கூறுபோட்டுப் பாகிஸ்தானை உருவாக்கினாலும், இரு தேசங்களுக்கும் மவுண்ட் பேட்டன் பிரபுவே கவர்னர் ஜெனரலாக இருப்பார் என்பதுதான் பிரிட்டிஷாரின் திட்டம். மவுண்ட் பேட்டனை் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஜின்னாவோ இதுகுறித்த தன் எண்ணத்தை...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 14

ஆர்ப்பாட்டங்களால், புரட்சிகளால், கலவரங்களால் வீழ்ந்த ஆட்சிகள் உலக சரித்திரத்தில் ஏராளம் தாராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அமைதியான பாதயாத்திரைகூட, ஒரு எதேச்சாதிகார அரசின் அஸ்திவாரத்தைப் பொலபொலக்க வைத்துவிடும் என்பதற்கு இலங்கையைத் தவிர வேறு நல்ல உதாரணம் கிடையாது. பலஸ்தீனத்தில் நடந்த இண்டிஃபாதா...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 7

அத்தனைக்கும் ஆசைப்படாதீர்கள் “ஹலோ… ஹலோ… கேக்குதுங்களா…” என்றவாறே அவசர அவசரமாய் வீட்டை விட்டு வெளியே வந்தார் ரகுநாதன். எப்போது ஃபோன் வந்தாலும் இதே ஓட்டம்தான். அவர் வீட்டிற்குள் மொபைல் சிக்னல்கள், “வரும்… ஆனால் வராது…” என்று கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தன. ரப்பர் ஸ்டாம்ப்கள் செய்து கொடுக்கும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!