ழ பேச்சும் ஒரு கலை. சிலர் கருவிலேயே திருவுடையோர். அவர்களுக்கு இக்கலை எளிதாக வசமாகிறது. அவ்வாறல்லாத மற்றவர்கள் முயன்று கற்க வேண்டியுள்ளது. பேச்சுக் கலையின் முக்கியமானதொரு அங்கம் உச்சரிப்பு. ஒவ்வொரு மொழியும் பிரத்தியேகமான சில ஒலிக்குறிப்புகளைப் பெற்றிருக்கின்றன. தமிழில் “ழ” போல. தாய்மொழி தவிரப் பிற...
Tag - தொடரும்
41. மூன்று உண்டியல்கள் ஒரு சிறுவனிடம் மூன்று உண்டியல்கள் இருக்கின்றன. முதல் உண்டியல் சிறியது. அதில் அவன் தன்னுடைய புதிய மிதிவண்டிக்குப் பணம் சேர்த்துக்கொண்டிருந்தான். இரண்டாம் உண்டியல் சற்றுப் பெரியது. அதில் அவன் தன்னுடைய அடுத்த ஆண்டுக்கான இன்பச் சுற்றுலாவுக்குப் பணம் சேர்த்துக்கொண்டிருந்தான்...
2. கிளாடியேட்டர் ரோமானியப் பேரரசில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிளாடியேட்டர் போட்டிகள் முதன்முதலாக நடத்தப்பட்டன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் கிளாடியேட்டர்கள் ரோமானிய மண்ணில் ரத்தம் சிந்தி மக்களை மகிழ்வித்தனர். மூதாதையருக்கு அஞ்சலி...
1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும் வைத்தபடி, ‘பார்சல் புக்கிங் எங்க’ என்று கேட்டான், முரட்டுக் கதர் குர்த்தாவும் அதற்கு சம்பந்தமேயில்லாத டிராக் ஸூட்டும் அணிந்திருந்த அவன். பெரிய ஆள்...
139. பையனா? பொண்ணா? விமானப் பயணத்தின்போதே, இந்திராதான் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்துவிட்டார் காமராஜ். ஆர்.வெங்கட்ராமனிடம், “அந்த அம்மாவுக்குப் பல உலக நாடுகளின் தலைவர்களைத் தெரியும்! அவங்க அப்பாவோட இந்த நாடு முழுக்கவும், இந்தியாவுக்கு வெளியிலயும் நிறைய பயணம் செய்திருக்காங்க! சுதந்திரப்...
ஏரிகளை நிறைக்கும் கண்ணீர் கிளிமஞ்சாரோ மலை. பூமத்தியரேகையை ஒட்டிய கடற்கரை. பசுமையான சமவெளிப்பகுதி. அடர்ந்த காடுகள். ஆழமான ஏரிகள். இவை உள்ள, தான்சென்யகா உள்ளடக்கிய பகுதியே தான்சேனியா. உங்கள் கண்களுக்குப் பச்சைப்பசேலென்ற அழகான நாடு. ஆனால் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் குடிநீர் இன்றி அலைகிறார்கள். ஒரு...
x. அமெரிக்கா பல நாட்டவரின் திறமைகளை உள்வாங்கி ஊக்குவிக்கும் அமெரிக்கா, பல நாடுகளின் சண்டைக்கலைகளையும் பாராட்டி ஊக்குவித்து வளர்த்தது. ஜப்பானிய, கொரிய, சீன, பிலிப்பைனிய சண்டைக்கலைகளை உள்வாங்கி அதில் அப்படியே தேர்ச்சி பெற்றும், அமெரிக்கப் பயிற்சிக்கு ஏற்றபடி அவற்றை மாற்றி வடிவமைத்தும் தன்...
10. இடுக்கண் வருங்கால் நகுக “இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.” இது திருக்குறள் 621. இதன் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவது என்னவென்றால். துன்பம் வரும் வேளையில் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அதுவே அத்துன்பத்தை வெல்வதற்கான சிறந்த வழியாகும் என்பதே. இதற்குப் பதில் சொல்வது போலக்...
பூசலார் கதை கம்ப்யூட்டர்களின் மெமரி அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்ஃபோனில் கூட 256 ஜீபி சாதாரணமாகிவிட்டது. ஆனால் நமக்குத்தான் எல்லாமே மறந்துபோகிறது. சென்ற தலைமுறை நினைவில் வைத்துக்கொண்ட அளவில் பாதி கூட இப்போது நம்மால் இயல்வதில்லை. ”எத்தனை ஃபோன் நம்பர் உங்களுக்கு ஞாபகத்துல இருக்கு…?” என்று...
40. அரை நூற்றாண்டுத் திட்டம் கல்லூரியில் படிக்கும்போது, நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு சுற்றுலாவுக்குத் திட்டமிட்டோம். அதற்குத் தின்பண்டங்கள் வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் பதினான்கு பேர். ஒவ்வொருவரும் சுமார் 150 கிராம் தின்பண்டங்களை மொசுக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், 14...