மின்சாரத்துக்கும் திமுகவுக்குமான பொருத்தம் என்பது எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. இதற்கான பரிகாரம் என்ன என்பதை திமுக அரசுதான் காலம் தாழ்த்தாமல் கண்டுபிடித்துச் செய்ய வேண்டும். இதை நாம் வலியுறுத்திச் சொல்வதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன. கடந்த 2001-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது...
Tag - நம் குரல்
ஒவ்வோர் இந்தியனும் நமது பிரதமரை நினைந்து நினைந்து நெஞ்சில் கழிபேருவகை கொள்ளலாம். ஆம்; உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் கிடைக்காத ஓர் அபூர்வ பிரதமர்தான் நமக்குக் கிடைத்திருக்கிறார். என்றாலும் நமது பிரதமரின் அருமை பெருமைகளையெல்லாம் முழுவதுமாக எடுத்துச் சொல்ல வேண்டிய நமது தேசபக்தர்கள், தங்களுடைய...
சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெய்திருக்கிறது. சீர்காழிப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பயிர்களெல்லாம் மழை நீரில் மூழ்கி...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்’ என்ற பாரதியின் பாடல் வரிகள் இல்லாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பாரதி ஏன் பகைவனுக்கும் அருள வேண்டுமென்று சொன்னான்? ‘பகை...
குஜராத்திலுள்ளது மோர்பி நகரம். இந்நகரை மச்சு நதி இரண்டாகப் பிரிக்கிறது. இதை இணைப்பதற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ஒரு தொங்கு பாலம். இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதுதான் இப்போது அறுந்து விழுந்து, இது எழுதப்படும் நேரம்வரை, நூற்று நாற்பத்தியொரு பேரைப் பலிவாங்கி, அனைவரையும் சோகத்தில்...
புதிய தலைமுறை பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த முத்துக்கிருஷ்ணன் என்னும் இதழாளர், மழை நீர் வடிகால் பகுதியில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது நேற்றைய செய்தி. ஓராண்டில் ஒன்றிரண்டு முறையாவது ஆழ்துளைக் கிணறில் தவறி விழுவோர் குறித்த செய்தி வராதிருப்பதில்லை. பாதாள சாக்கடையில் தவறி விழுந்தவர்கள்...
ஒரே நாடு, ஒரே உரம் என்றொரு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கிறார். இதன் மூலம் தேசமெங்கும் உரங்களின் விலை குறையும் என்றும் சொல்லியிருக்கிறார். உரங்களின் விலை குறைந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தால் நல்லதுதான். யூரியா, பேக்டம்பாஸ் அது இதென்று வேறு வேறு பெயர்களுக்கு பதில் ‘பாரத்’...
பொதுவாக மனித குலம் திணிப்புகளை விரும்பாது. விருப்பத்தின் பேரில் தவறான தேர்வுகளை மேற்கொண்டு அவதிப்பட்டாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் விருப்பமில்லாத ஒன்று சரியானதாகவே இருந்தாலும் ஏற்பதற்கு மனம் கூடாது. இதனால்தான் ஒவ்வொரு நாடும் சட்டங்கள் வரையறுக்கும் போது அவற்றின் நியாயம் புரியும்...
காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலமா என்று தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. ஏன்? கொஞ்சம் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். ‘இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை...
‘நீங்கள் எப்போது பார்த்தாலும் கடவுள் இல்லை; இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, ஒருநாள் கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?’ என்று பெரியாரிடம் ஒருவர் கேட்டார். ‘கடவுளே நேரில் வந்த பிறகு எனக்கென்ன பிரச்னை? கடவுள் இருக்கிறார் என்று பிரசாரம் செய்வேன்’ என்று சர்வசாதாரணமாகப்...