புதிது புதிதாக அரசியல் கட்சி தொடங்கப்படுவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. மக்கள் சேவை மட்டுமே நோக்கம் எனில் தொண்டு நிறுவனம் ஆரம்பித்தாலே போதும். ஆண்டுக்கு ஐம்பதாயிரம் மாணவர் படிக்க நிதியளிக்கலாம். அரசு போகாத மலைக் கிராமங்களைத் தேடிப் போய் சாலை அமைக்கலாம். அரசின் பார்வை படாத குக்கிராமங்களில் மருத்துவ...
Tag - நம் குரல்
வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள்கள் சந்தைக்கு நகரம்தான் இலக்கு. எப்போதும் இல்லாத வழக்கமாக இந்தாண்டு கிராமப் பகுதிகளில் விற்பனை கூடி தேவை அதிகரித்திருப்பதாகத் தகவல் வருகிறது. மத்திய அரசு, தங்கள் முயற்சியால் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளது. பயிர்களுக்கு...
மழை என்ற சொல்லைக் கேட்டதும், அது நம்மை நோக்கித்தான் வருகிறதென்று பாய்ந்து ஓடிப் பதுங்குகிறோம். தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் புயல் ஒன்று மேற்கு வங்கம், ஒடிசா பக்கமாகப் போகிறது. இந்த வாரம் அதனால் மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்திலும் இருபது நாள்களுக்கு மேல் மழை பெய்ய...
கனடா உடனான தனது தூதரக உறவினை இந்தியா முறித்துக்கொண்டிருக்கிறது. இந்தியத் தரப்பு நியாயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெரிய நாட்டுடனான உறவை இன்னொரு பெரிய நாடு முறித்துக்கொள்வதை இதர உலக நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா – ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளாது. ஆனால், அதற்காக...
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஹரியானாவில் பாரதிய ஜனதாவும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றன. அதைப் பொய்யாக்கி பாரதிய ஜனதா வென்றுள்ளது. வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால்...
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதால் இது வியப்பையோ அதிர்ச்சியையோ வேறெதையுமோ தரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்தத் தலைவர், அந்தக் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்பட்சத்தில் ஸ்டாலினுக்கு அடுத்த முதலமைச்சர் அவர்தான்...
திருப்பதி லட்டில் கலப்படச் செய்தியை எல்லாரும் படித்திருப்போம். அந்த ஆய்வறிக்கையை எத்தனை பேர் படித்தோம்? தரமான பசு நெய்தானா எனப் பரிசோதித்தது அந்த ஆய்வு. தூய்மைத் தேர்வில் தேறவில்லை. கலப்படம் இருக்கலாம் என்பது யூகம்தானே ஒழிய உறுதி அல்ல என்கிறது அறிக்கை. என்ன மாதிரியான கலப்படம் இருந்தால் இப்படி...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிகிறது. இதனை, ‘தமிழ்நாட்டு அரசு கலந்துகொள்ளவில்லை, அரசை வழி நடத்தும் கட்சிதான் கலந்துகொள்கிறது’ என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய...
தமிழ்நாட்டை அறிவுசார் செயல்பாடுகளில் முன்னணியில் நிறுத்துவது அரசின் கனவாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைப்பதில் தொடங்கி பள்ளிகளில் அறிவியல் ஆர்வம் உண்டாக்கும் வானவில் மன்றம் வரை பல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. நல்லது. திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவை நீர்த்துப்...
சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், சில ஆரம்பத் தடுமாற்றங்கள் அந்தப் பாடப்புத்தகங்களில் இருந்தன. சுட்டிக்காட்டப்பட்டதும் உடனடியாக அவை சரி செய்யப்பட்டன. அந்த ஒரு குறுகிய காலச் சம்பவத்தைத் தவிர, தமிழ்நாட்டு அரசின் பாடத் திட்டங்களில் எப்போதும் சிக்கலோ, குறையோ இருந்ததில்லை. அனைத்து...