ஆயிரத்துத்தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டாம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்த இந்த இரண்டு சம்பவங்களுக்கும் மதவெறியே காரணமாக இருந்தது. இரண்டு சம்பவங்களுமே இந்தியாவின்...
Tag - நம் குரல்
டிசம்பர் 6, 1992 அன்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவக் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அங்கே ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு வழக்குகள், விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள், குண்டு வெடிப்புகள், இழப்புகள், நீதிமன்றத் தீர்ப்பு இன்னபிற. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு...
நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. பபாசி என்கிற தனியார் அமைப்பு (தென்னிந்திய பதிப்பாளர்கள்-விற்பனையாளர்களின் கூட்டமைப்பு) நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி, ஆண்டுக்கொரு முறை ஜனவரி மாதத்தில் நடைபெறும். சென்னையின் மிகப்பெரிய கலாசார-பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகக்...
புத்தாண்டு தொடங்கும் போதே சென்னை புத்தகக்காட்சியும் தொடங்கியிருக்கிறது. கடந்த நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னையின் கலாசார அடையாளங்களுள் தலையாயதாக இது மாறியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருவது. வருடா வருடம் புத்தகக் காட்சிக்கு வரும் கூட்டம் உயர்ந்துகொண்டே செல்வதாக ஒவ்வோராண்டும் சொல்கிறார்கள். அதற்கு...
ஆண்டிறுதி என்றாலே சில அசம்பாவிதங்கள் நிகழ்வது வழக்கமாகிப் பல வருடங்களாகிவிட்டன. இம்முறை உத்தர்கண்ட் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் நல்லபடியாக மீட்கப்படுவார்களா என்று கவலைப்படத் தொடங்கி, சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் வரை ஒரு பெரும் ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டது. சரி, இனி சற்று மூச்சு...
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்திருக்கும் மழையை வரலாறு காணாத மழை என்று சொல்கிறார்கள். வானிலை மைய இயக்குநர், இப்படியொரு மழையை என் பணிக்காலத்தில் கண்டதில்லை என்கிறார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு நாளில் பதிவான மழையின் அளவு ஓராண்டு முழுவதும் பெய்திருந்தாலும் வந்திருக்க...
மீண்டும் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு பேசுபொருளாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியதை அடுத்துத் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை சரியே என்பது...
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை மழை என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் வேறு சிந்தனையே இல்லாமல் அதைக் குறித்து மட்டுமே பேசுவது சென்னை மக்களின் பழக்கம். அப்படி ஆண்டுக்கொரு முறை வருகிற மழையும்...
மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சியாகிவிடுவதே காரணம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு சட்ட மன்றத்தில் செயல்படும் எதிர்க்கட்சிகள்கூட அத்தியாவசிய...
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், விளையாட்டு – கேளிக்கை என்பதற்கு அப்பால் நமக்குச் சில செய்திகளை மௌனமாகத் தெரியப்படுத்துகின்றன. அதில் முதன்மையானது, ஒரு விளையாட்டை நாம் அதற்குரிய மதிப்பில் அணுக மறந்துகொண்டிருக்கிறோம் என்பது. இறுதி ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது இந்தியத் தரப்பில்...