நம் நாட்டில் சாதியும் மதமும் அரசியலின் துணைக் கருவிகள். சாதாரண மக்களின் ஆவேச உணர்ச்சியை எளிதாகத் தூண்டி, அமைதியைக் குலைப்பதற்கு இவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட நாள்களாக இங்கே உள்ளது. சாதிகளை ஒழிப்போம், மதவெறி இல்லா தேசத்தை உருவாக்குவோம் என்று யாராவது பேசுவார்களேயானால், அதுவும் ஓட்டு அரசியலின்...
Tag - நம் குரல்
ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW), இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) அங்கீகாரத்தை இடை நிறுத்தம் செய்திருக்கிறது . இந்தியா சார்பாகப் பங்கேற்று வெற்றி பெற்று, மூவர்ணக் கொடியை ஏந்தி வலம் வருவதே விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவு. தங்கள் உடலை வருத்திப் பல வருடங்கள் உழைப்பது அதற்குத்தான்...
விவசாயிகளுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டிக்கத் தவறும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம். கச்சத்தீவுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசைக் கண்டிக்கிறோம். பேனா நினைவுச் சின்னத்துக்குக் கண்டிக்கிறோம். மின் கட்டண உயர்வுக்குக்...
வேங்கை வயல் விவகாரம் அளித்த அதிர்ச்சியே இன்னும் நினைவை விட்டு நகராத நிலையில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் சிலர் சக (பட்டியலின) மாணவனையும் அவனது சகோதரியையும் அரிவாளால் வெட்டியிருக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. 16-17 வயது இளைஞர்களின் மனத்தில் சாதிய வன்மம் அந்தளவுக்கு ஆழமாக ஊன்றப்பட்டிருப்பதை...
மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பிரதமரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தொடங்கியிருக்கிறது. பதில் சொல்ல வேண்டிய பிரதமர் இதனைத் தவிர்த்திருக்கிறார். அமித்ஷா பதில் சொல்வார். வேறு பலர் சொல்வார்கள். யாரோ எதையோ...
மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தை விமரிசனம் செய்த குற்றத்துக்காகப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி தமிழ்நாட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, மூன்று நாள்களுக்குப் பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார். பத்ரி சேஷாத்ரியின் மணிப்பூர் தொடர்பான கருத்துகள் ஏற்கத்தக்கவையல்ல. சிந்திக்கத் தெரிந்த எந்த...
மணிப்பூர் கலவரம் அதன் அடுத்தக் கட்டத்தைத் தொட்டிருக்கிறது. இரண்டு மாதங்களாக அது வேறு ஏதோ தேசத்தின் பிரச்னை என்பது போல அமைதி காத்து வந்த பிரதமர் இப்போது முதல் முறையாக மணிப்பூர் குறித்துப் பேசியிருப்பதிலிருந்து இதனை உணரலாம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்னையாக...
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலுக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் தம்மை வலுப்படுத்திக்கொள்வதிலும், ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதிலும் மும்முரமாக இருப்பதை உணர முடிகிறது. அமலாக்கத்துறை ரெய்டு...
நம் நாட்டில் ஒரு வழக்கம் உண்டு. பெருந்தலைவர்களின் பிறந்த நாள் அல்லது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினம் என்றால், அதனை முன்வைத்துச் சிறையில் இருக்கும் சில கைதிகளை நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்வார்கள். கவனிக்க. நன்னடத்தை இருந்தால் மட்டும். மன்னிக்கக் கூடிய குற்றமாகக் கருதப்பட்டால்...
ஒரு வைரஸ் காய்ச்சல் வரப் போகிறதென்றால் முதலில் லேசாகத் தொண்டை கரகரக்கும். பிறகு மூக்கொழுகும். தலை வலிக்கத் தொடங்கும். கடைசியில் காய்ச்சல் வந்ததும் டாக்டரைப் பார்க்கக் கிளம்புவோம். அல்லது மருந்துக் கடையில் பாராசிட்டமால் வாங்கிப் போட்டு சரி செய்ய நினைப்போம். ஒரு நாட்டின் சுகக் கேடு என்பது பொதுவாக...