Home » நம் குரல் » Page 9

Tag - நம் குரல்

நம் குரல்

மதுக்கடைகள், ரசீதுகள் மற்றும் சில சிந்தனைகள்

உணவு, உடை, உறைவிடம் என்கிற மூன்று அடிப்படைகளில் சிக்கல் இல்லாத நிலை உண்டாகும்போது கேளிக்கை என்னும் நான்காவது அம்சத்தைத் தேடிச் செல்வதே மனித குலத்தின் இயல்பாக ஆதிகாலம் முதல் இருந்து வந்திருக்கிறது. போதை என்பதைக் கேளிக்கையின் ஓரங்கமாக நாம் கொள்ள இயலும். ஓர் அரசு இதனை மட்டுப்படுத்தலாம், தேட வைக்கலாம்...

Read More
நம் குரல்

தடுக்கி விழுந்த தார்மீகம்

ரெய்டு, கைது, விசாரணை என்பதெல்லாம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கோ, மக்களுக்கோ புதிதல்ல. ஊழலை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு மறக்கப் பழகிவிட்டோம். ஓர் ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைதாகி தண்டனை பெறும்போதுதான் அது ஓரளவு மதிப்புப் பெறுகிறது...

Read More
நம் குரல்

தடம் புரளும் துறை

ஓரிரு வருடங்களுக்கு முன்பு, விமான நிலையக் கூரை இடிந்து விழுந்தது என்று மாதம் ஒருமுறையாவது செய்தி வரும். இது ஒரு ‘வழக்கம்’ ஆகிவிட்டபோது ‘விமான நிலையக் கூரை, இத்தனையாவது முறையாக உடைந்து விழுந்தது’ என்று எழுத ஆரம்பித்தார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் என்ற ஒன்று ஏற்படாததால் அது ஒரு நகைச்சுவையாகிப்...

Read More
நம் குரல்

கலாசாரத்துக்குப் போதாத காலம்

இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே சமயம் ஒரு தேசமாக இதைக் கட்டியெழுப்பிக் காப்பதிலும் சமரசமற்று இருப்பதுதான் இதில் முக்கியமானது. சுதந்தரத்துக்குப் பிறகு சமஸ்தான ஒருங்கிணைப்பு நடைபெற்றது...

Read More
நம் குரல்

செங்கோல் அரசியல்

ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி வைத்துவிட்டு இந்த செங்கோல் அரசியலைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பது நல்லது. மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு முகம் இருந்து வருகிறது...

Read More
நம் குரல்

என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு என்பது வலுவானதாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் இதன் லாபங்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. மிக எளிய, மிகச் சமீபத்திய...

Read More
நம் குரல்

சாராயச் சாவுகளும் உதவாத தீர்வுகளும்

எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும் அதிரடியாகச் செயல்பட்டு ஒன்றிரண்டு தினங்களில் சுமார் இரண்டாயிரம் பேரைக் கைது செய்ய முடிகிறது என்றால் இது எவ்வளவு பெரிய துறை, எத்தனை ஆயிரம் பேர் இதில்...

Read More
நம் குரல்

திமுகவும் நீட் எதிர்ப்பு விளையாட்டுகளும்

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைந்தன. இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுகள் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன. அரசைக் குறை சொல்வதல்ல நோக்கம். நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றைத் தேர்தல் வாக்குறுதியாகத் தரும்போது ஆய்ந்து தெளிய வேண்டியது மக்கள் பொறுப்பே. அதைச் செய்ய விடுத்து...

Read More
நம் குரல்

கடலோரக் கவலைகள்

சில நாள்களுக்கு முன்னர் சென்னை கடற்கரையை ஒட்டிய நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்த மீன் கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தினரால் அப்புறப்படுத்தப்பட்டன. வழக்கம் போல எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்தன. பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர். மேலோட்டமான பார்வையில் இது ஒரு சிறிய, எளிய சம்பவம்...

Read More
நம் குரல்

தவறுகளின் தொடக்கப் புள்ளி

தமிழர்கள் என்றில்லை. பொதுவாக மனிதர்கள் அனைவருமே மூன்று விஷயங்கள் சார்ந்து மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பார்கள். வேலை-வருமானம் முதலாவது. குடும்பம்-சுற்றம் அடுத்தது. மதம் உள்ளிட்ட சொந்த நம்பிக்கைகள், சார்புகள் மூன்றாவது. இந்த மூன்றில் எது ஒன்றின்மீது கல் விழுந்தாலும் உடனே பதற்றம் எழும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!