1. கருவி சலங்களின் நடுவே அமிர்தம் உண்டு. சலங்களில் சிகிச்சை உண்டு. – அதர்வ வேதம் ஒளி நிறைந்து படர்ந்திருந்தது. கண்ணுக்குப் புலப்படாத தொலைதூரச் சுரங்கங்களில் இருந்து அதனை இழுத்து வரும் நதியே வானை நோக்கி வெளிச்சத்தை வீசியெறிந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. இருளையும் ஒளியையும் காற்றையும்...
Tag - நாவல்
120 வரும் போகும் சுகுமாரனுக்கு சென்னையிலேயே வேலை கிடைத்தது. அவன் தங்க இவன்தான் இடம் பார்த்துக்கொடுத்தான். க்ரியா திலீப்குமார் முதல் ஓவியர் அச்சுதன் கூடலூர் வரை பிரபஞ்சன் முருகேச பாண்டியன் என்று பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கியிருந்த ஆகிவந்த இடமென்று இவன்தான் அவனை ஜானிஜான் கான் சாலையில் இருந்த...
119 வாந்தி ‘தேவடியாப் பையா!’ என்றார் சுப்ரமண்ய ராஜு, மாரீஸ் பாரில் கதவை அடுத்து சுவரையொட்டிப் போடப்பட்டிருந்த நீளவாக்கிலிருந்த சோஃபாவில் அமர்ந்து கைகளை நீட்டிப் போட்டுக்கொண்டபடி. கையில் பேண்டு மாஸ்டர் பிளண்டு விஸ்கி கிளாஸுடன் அருகில் இவன் அமர்ந்திருந்தான். இவன் கிளாஸில் இருந்த ஸ்மாலில் பாதியைக்...
118 கோடைகாலக் குறிப்புகள் தன் தொகுப்பை வெளியிட்ட அனுபவத்தில் அடுத்த வருடமே தருமுவின் கட்டுரையைப் புத்தகமாகக் கொண்டுவந்ததில் நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையோடு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருந்தவன் பேச்சோடு பேச்சாக ஒருநாள் சுகுமாரனிடம் கேட்டான். ‘நீ எப்பலேந்து கவிதை எழுதறே’ ‘ஸ்கூல்ல...
117 நண்பர்கள் எதிர்மறை அபிப்ராயங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் எவர் மனமும் புண்பட்டுவிடாமல் எல்லோருடனும் நயமாகப் பழகுபவன் என்பதால் அநேகமாக சுகுமாரனைப் பற்றி எதிர்மறை அபிப்ராயங்களே இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவனுக்கு எதிர்மறை அபிப்ராயங்களே இல்லை என்கிற மாயத்தோற்றம் நிலவியது. தூரத்தில்...
116 நேரம் ஐஸ் ஹவ்ஸ் மசூதி சந்திப்பில் இருக்கும் டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ரமேஷ் சொன்னான், ‘என் ஃபிரெண்டு சேகர் உன்னைப் பத்தி விசாரிச்சாண்டா’ என்று. ‘சேகரா. அது யாரு.’ ‘அதாண்டா உங்க ஆபீஸ்ல பெரிய போஸ்ட்ல இருக்கான். ஒரு யூத் கேம்ப்ல மீட் பண்ணினேன்னு சொன்னேனே. நீ கூட, உங்க...
115 கணக்கும் வழக்கும் ஒரு மதியம் சுந்தர ராமசாமியை ரயிலேற்றிவிட வசந்தகுமார் மோகன் போன்ற நண்பர்களுடன் எக்மோருக்குப் போயிருந்தான். பழம் வாங்கப் பணம் கொடுத்தார். வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். வண்டி முதல் விசிலைக் கொடுத்தபோதுதான் மீதியைக் கொடுக்காதது...
114 பிரிவும் சந்திப்பும் ஶ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை கட்டுரையைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியதில் நிமாவைப் பற்றிய நினைவே எழவில்லை. தனக்காக அவள் என்னவும் செய்வாள் என்கிற நம்பிக்கையில் இருந்தவனுக்கு, புத்தகத்துக்கு இல்லை என்று அவள் மறுத்தது சுருக்கென்று தைத்தது. எடுத்திருப்பது எவ்வளவு...
113 உறவுகள் இந்திரா காந்தி எங்கேயோ இருப்பவர் என்பதாலோ என்னவோ அவர் மீதான தீவிர விருப்பத்தைப்போலவே படுகொலையின் எதிரொலியாக சீக்கியர்களுக்கு எதிரான தீவிர வெறுப்பும் இங்கே பெரிதாக இருக்கவில்லை. பெயருக்கு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில் மோட்டார் உதிரி பாகங்கள் விற்கிற நான்கு சர்தார்ஜிக்களை அடித்ததோடு கடமையை...
112. வடு ‘என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா.’ ஆபீஸில் யாரோ அவனிடம் சொன்ன செய்தியை அதிர்ச்சியில் சத்தமாக எதிரொலித்தான். நெஜமாவா. நெஜமாவே சுட்டுட்டாங்களா. உயிரோட இருக்காளா போய்ட்டாளா என்றான் நடைவழிக்கு அந்தப் பக்கமாக உட்கார்ந்திருந்த கேஷியர் விஸ்வநாதன். அவ்வளவுதான் வதந்தியா செய்தியா என்றே...