87 விழா முதல் தொகுப்பை எந்தப் பதிப்பகத்தையும் எதிர்நோக்கி இருக்காமல் எப்படித் தானே போட்டுக்கொள்கிறானோ அப்படியே வாழ்நாள் முழுக்க அவனேதான் தன் புத்தகங்களைப் பதிப்பித்துக் கொள்ளப்போகிறான் என்பது அவனுக்கு அப்போது தெரியாது. அதே போல வாழ்நாளில் தன் புத்தகத்திற்காக அவன் நடத்தப்போகிற முதலும் கடைசியுமான...
Tag - நாவல்
86 அறைகள் அட்டையில் வந்த சிக்கல் அவனுக்கு அறிவுஜீவிகளின் அடிப்படை பற்றிய மிகப்பெரிய பாடத்தைப் பூடகமாய் போதித்தது. நமக்கு நடக்கிற அசம்பாவிதம், நடப்பதற்கு முன் யாரும் எச்சரிக்கமாட்டார்கள். மிதமிஞ்சிய படிப்பு காரணமாய் அறிவாளிகளாக இருக்கும் அவர்களுக்கும் அநேகமாய் நம்மைப் போலவே அதைப் பற்றித்...
85 ஆளுக்குப் பாதி அப்துல் ரஸாக் என்றோ அல்லது அதைப்போல ஒரு பெயரையோ சொல்லியிருந்தான் நடேஷ். அதுவேறு நினைவில் தங்காமல் அலைக்கழித்தது. நிறையக் குல்லாக்கள் குறுக்கும் நெடுக்குமாய் போய்வந்து கொண்டிருந்த மசூதி தெருவில் போய் பாய் கடை எது என்று எப்படிக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது. ‘இங்க லேமினேஷன்...
84 ஆதியும் மீதியும் புத்தகம் முடிந்தேவிடும் நிலையில் இருக்கையில், ‘புக்கு நல்லா வரும்ங்க’ என்று நம்பியே சொல்லிவிட்டது கொஞ்சம் தெம்பாக இருந்தாலும் அட்டை இன்னும் வராதது பெரிய டென்ஷனாக இருந்தது. எல்லாம் சரியாக நடக்கவேண்டுமே என்கிற சஞ்சலத்திலேயே சதாகாலமும் உழன்றுகொண்டு இருப்பவனுக்கு...
83 புத்தகம் போட்டுப் பார் கல்யாணம் பண்ணிப் பார்! வீட்டைக் கட்டிப் பார்! என்று அனுபவஸ்தர்கள் சிரித்துக்கொண்டே தீவிரமாகச் சொல்வதைப்போலப் புத்தகம் போட்டுப் பார்! என்பதற்கு அவனே உதாரணமாக ஆகப் போகிறான் என்பதை, ஆரம்பிக்கும்போது அவன் உணர்ந்திருக்கவில்லை. எல்லாவற்றையுமே கடந்துவந்தபின் எவருடையதோபோல்...
82 தெளிவு வருவதாய்ச் சொன்ன தேதிக்கு சரியாக ஒரு வாரம் தள்ளி வந்தான் சுகுமாரன். அவனைப் பார்த்ததுமே டபக்கென ஜோல்னா பையில் இருந்து வெளியில் குதித்தது நாற்காலிக் கதை. ‘ஹூம்’ என்று முறுவலித்தபடி, ‘கதையா’ என்றான். ‘நா வேற என்னத்தக் குடுக்கப்போறேன்.’ ‘உன்னைப்...
80 நிறையும் குறையும் எழுதியதைப் படிக்கப் படிக்க இனி கையே வைக்கவேண்டாம் என்கிற அளவுக்குத் திருப்தியாக இருந்தது. அப்படியே தூக்கி தூர வைத்துவிட்டான். இது ஆபத்து. எழுதியது நிறைவைத் தருவதைப்போல வேறு எதுவும் அவனுக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால், மகிழ்ச்சியில் துள்ளியபடி படித்தால்...
2023-ம் வருடம் பிறந்ததும், எனக்குக் கிடைத்த முதல் பரிசு ஆசிரியர் பா.ரா. நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்புகள்தான். மொழியைப் படிக்க, எழுதத்தெரியும் என்ற அடிப்படைத் தகுதியைத்தாண்டி என்னால் முறையாகத் தமிழ் உரைநடையைக் கையாளத்தெரியும் என்ற நம்பிக்கையையும், நுட்பங்களின் வழி அவற்றை மெருகேற்றக்கூடிய நெளிவு...
இந்த வருடத்தைத் திரும்பிப் பார்த்தால் சாதனையாகத் தெரிவது எழுத்தொழுக்கத்தின் முதல் படியில் என் காலை எடுத்து வைத்திருப்பதுதான். என் வீட்டைப் பார்க்கத்தான் கண்றாவியாக இருக்கிறது. கிடக்கிறது கழுதை. இந்த மல்ட்டி டாஸ்கிங் எல்லாம் எனக்கு எப்போதுமே ஒத்து வருவதில்லை. வீடு என்பது சுவரும் சுத்தமும் அல்ல...
சென்னை புத்தகத்திருவிழா, முதல் புத்தக வெளியீடு என்று ஜனவரி 2023 கொண்டாட்டம் முடிந்தது. பொறுப்பான எழுத்தாளராக இரண்டாவது புத்தகத்திற்குத் திட்டமிட்டேன். புத்தக ஆராய்ச்சி ஒருபுறம், அது சார்ந்த இடங்களைத் தேடிச்சென்று பெற்ற நேரடிஅனுபவம் மறுபுறம் என்று வேகமாக புத்தகத்தை எழுதத் தொடங்கினேன்...