கோஸ்டா ரிக்காவின் முன்னாள் அதிபர் ஆஸ்கர் ஏரியஸ், அமைதிக்கான நோபல் விருது பெற்றவர். எண்பத்தைந்து வயதான இவருக்கு திடீரென அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை. அமெரிக்காவும் சொல்லவில்லை. சில நாள்களுக்கு முன் ட்ரம்ப்பின் ஆட்சியை விமர்சித்து ட்விட்டரில் ஒரு பதிவு...
Tag - நோபல் பரிசு
தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு (Han Kang) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர். நோபல் பரிசு பெறும் பதினெட்டாவது பெண் என்ற பெருமைகளையும் சேர்த்தே பெறுகிறார். `வரலாற்றுத் துயரைத் துணிவுடன் எதிர்கொள்ளும் கவித்துவ...
கணினித் துறைக்கு நோபல் பரிசு கிடையாது. ஆனால் இவ்வாண்டு இரண்டு நோபல் பரிசுகள் கணினித் துறை சார்ந்தே வழங்கப்பட்டிருக்கின்றன. பள்ளிப் பருவத்து அறிவியல் பாடப்புத்தகத்தில் மூன்று பிரிவுகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல். இவ்வாண்டு இயற்பியல் மற்றும் வேதியியல்...
அந்தக் கடற்கன்னி ஓர் இளவரசனைக் காதலித்தாள். ஆனால் கடற்கன்னியாக இருப்பதால் அவளால் அவனைத் திருமணம் செய்ய முடியவில்லை. அதற்காக அவள் சோர்ந்து விடவில்லை. தன்னுடைய மாய சக்திகளால் இடுப்புக்குக் கீழே தன் செதில்களைக் கால்களாக மாற்றி அமைத்துக் கொண்டாள். இதற்கு மேல் நீரில் தனக்கு வாழ்வு இல்லை என்று தெரிந்தும்...
இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். அவர் கண்டுபிடித்த ஹிக்ஸ் போசான் என்ற துகள், காலத்தால் அழியாதது. கடவுளும் இயற்பியலும் இருக்கும்வரை இருக்கப் போவது. எத்தனையோ நவீன ஆய்வுகளுக்கு அடித்தளம் அமைத்துத் தரப்போவது. பீட்டர் ஹிக்ஸ், இங்கிலாந்தில் பிறந்தவர். அவரது தந்தை தாமஸ் வேர் ஹிக்ஸ், பிபிசியில்...
மியான்மர் ராணுவ அரசு கட்டாய ராணுவச் சேவை திட்டத்தை ஏப்ரல் முதல் செயல்படுத்த உள்ளது. ஏற்கெனவே அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆள் சேர்ப்புப் பணி நடந்துகொண்டுதான் இருக்கிறது. பல்வேறு நாடுகளில் இம்மாதிரித் திட்டம் நடைமுறையில் உள்ளதுதான். பெரும்பான்மை மியான்மர் மக்கள் இந்த அரசைத் தங்கள் சட்டப்படியான அரசாகக்...
16 – சுவரால் தகர்ந்த நம்பிக்கை நாள்: 9 – நவ – 1989. இடம்: கிழக்கு ஜெர்மனி. நிகழ்ச்சி: குண்டெர் ஷபாவ்ஸ்கியின் செய்தியாளர் சந்திப்பு. “பெர்லின் சுவரின் அனைத்து சோதனைச் சாவடிகள் வழியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கிடையே நிரந்தரமாக இடம்பெயர்ந்துக் கொள்ளலாம்.” என்று...
இதுவரை நூற்று ஐம்பத்து நான்கு கசையடிகள், பதின்மூன்று தடவை கைது, ஐந்து தடவை குற்றவாளி என்று நீதிமன்றத் தீர்ப்பு, 2015-ஆம் ஆண்டு முதல் பதினாறு வருட சிறைவாசம் என்று நெடும் துயரைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நர்கீஸ் முஹம்மதி என்ற ஈரான் மனித உரிமைப் போராளிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான...
ஒவ்வொரு வருடமும் இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்படும். ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்புப் பட்டியலில் முரகாமியின் பெயர் இருக்கும். ஒவ்வொரு வருடமும் பரிசு அவருக்கு இருக்காது. இது இன்று நேற்றல்ல. பல வருட காலமாக நடப்பதுதான். இந்த வருடமும் இந்தத் திருவிழா ஜோராக நடந்து முடிந்தது. ஆனால் முரகாமி இதையெல்லாம்...
இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு (Nobel Prize for Physiology or Medicine) அமெரிக்காவினைச் சார்ந்த உயிர்வேதியியல் விஞ்ஞானி (Biochemist) காடலின் காரிகோ (Katalin Karikó) அம்மையாருக்கும் நோய் எதிர்ப்பு அறிவியல் விஞ்ஞானி (Immunologist) ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman) அவர்களுக்கும் இணையாக...