அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாச் சொர்க்கபுரியில் இருந்து தம் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அப்படி ஒரு நான்காம் தர எச்சரிக்கை அறிக்கையை விடுக்கும் என்று...
Tag - பாலஸ்தீன்
“இஸ்ரேலிய மக்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைக்கிறார் அதிபர் நெதன்யாகு. ஃபிலடெல்பியா காரிடரில் இஸ்ரேலியப் படையை நிறுத்துவதெல்லாம் பெரிய ஏமாற்று வேலை” என்கிறார் இலாய் அல்பாக், காஸாவில் பிணைக்கைதியாக இருக்கும் லிரி அல்பாகின் தந்தை. காஸாவின் கிழக்கில் அமைந்துள்ள எகிப்துடனான எல்லை தான்...
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள…. குறிப்பாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தொடர் போராட்டங்களையும் மாணவர் எழுச்சியையும், ஒரு தாக்குதலும் அதைத் தொடர்ந்த இஸ்ரேலின் போரும் தோற்றுவிக்கும் என்று ஹமாசோ, இந்த அளவு ஆதரவு பெருகும் என பாலஸ்தீனமோ எதிர்பார்த்திருக்காது. சமூக...
ரமலான் மாதம் ஆரம்பித்தவுடன், இரவுச் சிறப்புத் தொழுகைக்குப் பள்ளிவாசல் நோக்கி சாரை சாரையாக இஸ்லாமியர்கள் செல்கிறார்கள். ஐந்து வேளைத் தொழுகையோடு இந்தச் சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’ ரமலான் மாதம் முழுக்க இரவுகளில் அனைத்து மசூதிகளிலும் நடக்கும். ஆனால் பாலஸ்தீனத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில்...
காஸா கடற்பகுதியில் அவசரமாக ஒரு கப்பல்துறையை அமைக்கவிருக்கிறது அமெரிக்கா. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அந்தக் கப்பல்துறை மூலமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் இன்னும் முடிந்தபாடில்லை. ஐந்து...
பாலஸ்தீன் ஸ்டேட் என்கிற தீர்வை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவ்வப்போது சொல்லி வருகின்றன. இஸ்ரேல் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது. சமீபத்தில் பைடன், ஏதோவொரு விதத்தில் பாலஸ்தீன் ஸ்டேட் அமைவதை நெதன்யாகு ஒப்புக்கொள்வார் என்று நம்புவதாகத் தெரிவித்தார். ஷபாத் நாளாக இருந்தாலும் பரவாயில்லை என்று...
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது பழங்காலச் சொலவடை. அமெரிக்கா அன்றி ஓரணுவும் அசையாது என்பது நவீனச் சொலவடை. அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நிகழும் உரசல்களில் ஜனநாயகம் பக்கம் நிற்பதை அடியொட்டியே பன்னாட்டுக் கொள்கைகளில் முடிவெடுக்கிறார்கள். மக்களின்...
இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸாவில் மூன்று யூதர்களைத் தவறுதலாக கொன்றது. பாலஸ்தீன ஆயுதக் குழுவால், அக்டோபர் 7 ஆம் தேதியன்று பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட இம்மூவரும் தப்பித்தோ அல்லது விடுவிக்கப்பட்டோ சென்று கொண்டிருந்தபோது அவர்களை பாலஸ்தீனியத் தீவிரவாதிகள் என்றெண்ணிச் சுட்டதாக இஸ்ரேல்...
குழந்தைகள் மருத்துவ உபகரணங்களுடன் இணைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைப் படுக்கையிலேயே இறந்து உடல் அழுகுகிற காட்சியைப் படம்பிடித்து வெளியுலகுக்குக் காட்டினார் செய்தியாளர் மஹமத் பாலுஷா. நவம்பர் பத்தாம் தேதி இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா, அல் நசிர் மருத்துவமனையில் இருந்தவர்களைக் கட்டாயப்படுத்தி...
காஸா பகுதியில் தாக்குதலுக்கு முன்பு உடனே வெளியேறும்படி எச்சரிக்கும் பேம்ப்லட்களை விமானம் மூலம் தூவி தாங்கள் விதிப்படி நடப்பதாக காட்டிக் கொள்ள முயல்கிறது இஸ்ரேல். எங்கும் பாதுகாப்பில்லை. எல்லா இடத்திலும் குண்டு விழுகிறது என்பதே உண்மை. “வெளியேறாவிட்டால் நீங்களும் தீவிரவாதத்துக்கு துணை நின்றவர்களாகக்...