39. ரசமணி நான் கன்னுலா. என்னைக் குலம் காக்கும் தெய்வமாக எங்கள் மக்கள் வணங்குவார்கள். சற்று விலகி நின்று என்னை நானே கவனித்தால் எல்லாமே அபத்தமாகத் தெரிகிறது. தெய்வமாகி என்ன, குலம் காக்க முடிந்தென்ன. என்னால் என் சகோதரனின் மனத்தை மாற்ற முடியவில்லை என்பதுதான் என் எல்லையைச் சுட்டிக்காட்டும் புள்ளியாக...
Tag - பா. ராகவன்
38. கையாள் கன்னுலா அந்தப் பட்சியிடம் சொல்லியனுப்பிய தகவலைத் தெரிந்துகொண்ட பின்பும் நான் எதனால் அந்த முனியுடன் கூடவே என் பிரயாணத்தைத் தொடர்ந்தேன் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அவளுக்கு முனியைப் பற்றி என்ன தெரிந்தது, எவ்வளவு தெரியும் என்பதை நான் அறியேன். அவன் ஒரு பூரண அயோக்கியன் என்பதற்கு அவளிடம்...
37. மணற்சூறை ஊர் மொத்தமும் பேசி முடித்துவிட்டது. இனி சொல்லவும் புலம்பவும் கதறவும் ஒன்றுமில்லை என்பது போல வாய் மூடி நின்றுகொண்டிருந்தார்கள். ரிஷி பேசவேயில்லை. அவர் யாரையும் பார்க்கவுமில்லை. எப்போதும் திறந்திருக்கும் அவரது வலக்கண் சர்சுதியையே இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தது. அவரது சிறு அசைவுக்காகக்...
36. சல புத்ரன் அன்றைய நாளை என்னால் மறக்க முடியாது. விடிந்ததிலிருந்தே எல்லாம் வினோதமாக இருந்தது. வனத்தில் எங்கள் குடிசை இருந்த எல்லைப் பகுதியில்தான் ஏராளமான பட்சிகளும் வசித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் புலரும் நேரத்தில் ஆயிரமாயிரம் பட்சிகள் கூக்குரலிட்டுக்கொண்டு நாலாபுறமும் பறந்து வான்...
35. பிசாசு எல்லாம் வினோதமாக இருக்கிறது. எல்லாம் விபரீதத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்வது போலவே தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் காரணனான சூத்திரதாரி ஓய்வெடுக்கச் சென்ற பொழுதில் எல்லாம் தன் அச்சிலிருந்து விலகியோடத் துடிப்பதாக உணர்கிறேன். நான் காமாயினி. குத்சனின் தாய். நீங்கள் என்னைத் தவறாக நினைக்கக்கூடாது...
34. ரதம் தனது வினாக்களின் நியாயம் அல்லது தகுதி குறித்து அந்த சூத்திர முனிக்கு எப்போதும் சிறியதொரு அகம்பாவம் உண்டு. நான் அதை ரசித்தேன் என்று சொல்ல இயலாது. ஆனால் என்னால் அதை மதிக்காமல் இருக்க முடிந்ததில்லை. அவன் உணர்ச்சிமயமானவனாக இருந்தான். ஏனோ எனக்கு அது எப்போதும் உவப்பற்றதாகவே இருந்தது. உணர்ச்சிகளை...
33. ஒன்று மர உடும்பு பிடிப்பதற்காகக் கானகத்தின் மையப் பகுதிக்குச் சென்றிருந்தேன். நெடுநேரம் சுற்றித் திரிந்த பின்னர் ஒரு பிலக்ஷண மரத்தின் மீதிருந்த துவாரத்துக்குள்ளிருந்து ஒன்று தலையை நீட்டியதைக் கண்டேன். மர உடும்பு பொதுவாகப் பகல் பொழுதில் பொந்தினுள் இருக்க விரும்பாது. மீறி இருக்கிறதென்றால் அது...
32. உயர்ந்தது நான் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக அந்த முனி சொன்னான். தான் கள்ளத்தனமாக என் மனத்துக்குள் புகுந்து அங்கிருப்பதைக் கண்டறிய முயன்றதை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டான். எனக்கு ஒன்று புரியவில்லை. இதில் மறைத்துக் களமாட என்ன இருக்கிறது? கன்னுலா எனக்கனுப்பிய செய்தியை நான் அவனிடம்...
31. பெயர்ச் சொல் அவனைப் போலொரு சூதற்ற மனிதனைக் காண்பது அபூர்வம். எனக்குச் சாரனின் வெளிப்படைத்தன்மை பிடித்திருந்தது. அச்சமோ அச்சமின்மையோ இல்லாத ஏகாந்த வெளியில் அவன் இருந்தான். அது பிடித்திருந்தது. யாருடைய கருத்தினாலும் அவனது தீர்மானம் அசைவதில்லை என்னும் உறுதிப்பாடு பிடித்திருந்தது. அதர்வனுக்கு...
30. உளக் குவிப்பு முன்பொரு முறை அந்த பிராமண ரிஷி என்னிடம் சொன்னான், ‘சூத்திர முனியே, நீ ஒரு சராசரி மனிதன்தான். ஆனால் சராசரி மனிதர்களால் எட்ட இயலாத உளக் குவிப்பு உன்னிடம் இருக்கிறது. தருணத்தின் தேவைக்கேற்ப நீ உன் தேகத்தையும் சித்தத்தையும் ஒற்றைப் புலனாக்கிக்கொண்டுவிடுகிறாய். இது அபூர்வமானது.’ நானொரு...