தமிழ்நாட்டைச் சேர்ந்த இருபத்தேழு மீனவர்களை மூன்று நாள்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கிறார்கள். பாக் ஜலசந்தி பகுதியில் அவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்தபோது இந்தக் கைதுச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. இதே போலக் கடந்த அக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு...
Tag - பிரதமர் மோடி
இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி இங்கே வாரணாசி கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடு நடந்தது. போர் ஆரம்பித்த பிறகு பலி எண்ணிக்கையைத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பி.பி.சி. செய்தி இப்படி இருக்கிறது. “இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 500 பேர் இறந்துவிட்டார்கள். ஹமாஸ் தாக்கியதில் இஸ்ரேலில் 700...
இருபது வருட இடைவெளிக்குப் பிறகு 2021-ல் தாலிபன் அமைப்பு ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியதை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 1996-லிருந்து 2001 வரை முதன்முறை அதிகாரத்தில் இருந்த போது சாதிக்க முடியாததை எல்லாம் இந்த முறை ஆட்சிக்கு வந்தபிறகு தீவிரமாகச்...
மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் பொன்விழா மாநாட்டுக்குப் பிறகு இந்தப் பக்கத்தில் எழுதிய குறிப்பை மீண்டும் ஒருமுறை படித்துவிடுங்கள். இனியேனும் அக்கட்சி பாரதிய ஜனதாவிடம் மண்டியிட்டுக்கொண்டிராமல் தனித்து இயங்க ஆரம்பிப்பதே அக்கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது என்று சொல்லியிருந்தோம். இன்று அது...
தென்மாவட்ட மக்களைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களில் மிகஅதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த செய்தி நெல்லையிலிருந்து சென்னை வரையிலான வந்தே பாரத் ரயில். ரயில்வே அதிகாரிகள் அறிவிக்காமலேயே வாட்சப்பில் ஆறுமாதமாகத் தேதி குறிக்கப்பட்டு உலா வந்த செய்தி இது தான். அவர்களது செய்தியும் எதிர்பார்ப்பும் இன்று...
இந்தியா Vs கனடா. கிரிக்கெட் போட்டியல்ல. இந்தியாவிற்கும் கனடாவிற்குமான அரசாங்க ரீதியிலான மோதல். வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா- கனடா இராஜாங்க உறவில் விரிசல் விழுந்திருக்கிறது. சர்வதேச அளவில் பேசுபொருளான இந்த நிகழ்விற்குத் தற்போதைய காரணம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கியர் கொலை...
ஒரு நாட்டின் பிரதமர், தம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பார்க்கவும் நடத்தவும் வேண்டும். எங்கே என்ன சிக்கல் எழுந்தாலும் உடனடி நடவடிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும். ஆனால் நமது பிரதமர் மணிப்பூருக்குப் போக மறுக்கிறார்...
செப்டம்பர் 9 2023. டெல்லி, ஜி 20 உச்சி மாநாடு. மதிய உணவு வேளை முடிந்து அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடங்கும் நேரம். கூடியிருந்த தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். மிகுந்த மகிழ்ச்சியுடன், நம் அனைவரின் கடின உழைப்பிற்குப் பயன் கிடைத்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன். டெல்லிப்...
நம் நாட்டில் சாதியும் மதமும் அரசியலின் துணைக் கருவிகள். சாதாரண மக்களின் ஆவேச உணர்ச்சியை எளிதாகத் தூண்டி, அமைதியைக் குலைப்பதற்கு இவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட நாள்களாக இங்கே உள்ளது. சாதிகளை ஒழிப்போம், மதவெறி இல்லா தேசத்தை உருவாக்குவோம் என்று யாராவது பேசுவார்களேயானால், அதுவும் ஓட்டு அரசியலின்...
2014 காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் முஃப்தி முகமத் சையித் வென்றது 28 இடங்கள். பி.ஜே.பி. வென்றது 25 இடங்கள். பி.ஜே.பி.க்கு துணை முதல்வர் பதவியளித்து முஃப்தி முகமது சையித் முதல்வரானார். சில மாதங்கள் பேச்சு வார்த்தை நடந்து அடுத்த வருடம்தான் பதவியேற்பு நடந்தது. அவர் இறப்புக்குப் பிறகு அவர் மகள் மெஹபூபா...