ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், மந்த்ராலயம். தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்றவற்றிலிருந்து மந்த்ராலயத்தை அடையப் பன்னிரண்டிலிருந்து பதினேழு மணி நேரம் வரை ஆகும். நேரடியாகப் போகும் ரயில்கள் குறைவாக இருப்பதால் மும்பை செல்லும் ரயில்களை நம்பியே இருக்க...
Tag - மதுரை
வயது முதிர்வு, உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ்(80) கடந்த ஞாயிறன்று காலமானார். “உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது. கஷ்டப்படவும் இல்லை கஷ்டம் கொடுக்கவும் இல்லை” என்று அவரது மருமகன் சதீஷ் நாராயணன் சொன்னார். “சனியன்று இரவு கூட வழக்கம்போலப் பேசிக்கொண்டிருந்தார். கடந்த இரண்டு...
ஸ்டார்ட் அப் கம்பெனிகள் திருவிழா, செப்டெம்பர் 28, 29 தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மரபான திருவிழாக்களுக்குப் பெயர் போன மதுரையில் நிறுவனங்களுக்கான இந்த புதுமைத் திருவிழாவும் சிறப்பாக நடந்தது. எண்ணிக்கையில் குறைவான பணியாளர்கள், குறைந்த மூலதனம், புதுமையான காலத்துக்கு ஏற்ற யோசனை...
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அரங்கில் நடக்கிறது மதுரை புத்தகக் கண்காட்சி. எதிர்வரும் பதினாறாம் தேதிவரை நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை அரங்கம் திறந்திருக்கும். மாலையில் இலக்கிய ஆர்வலர்களின் ரசனையைக் கருத்தில் கொண்டு பேச்சரங்கங்கள் நடைபெறுகின்றன...
“வாயை மூடு“ என்று நம்மிடம் யாராவது சொன்னால் நமக்கு கோபம்தான் வரும். ஏனெனில் அது மனிதர்களிடமிருந்து வரும் சாதாரணக் கட்டளை வாக்கியம். ஆனால், அதனையே குருநாதர் பரமசிவேந்திரர், தனது சீடன் சிவராமகிருஷ்ணன் என்கிற சதாசிவப் பிரம்மேந்திரரிடம் சொன்னபோது, அந்தச் சீடனுக்கு ஞானம் வந்தது. ஏனெனில் அது...
மிஸ்டர் சந்திரமௌலி, மிஸ்டர் சந்திரகுமார் யாரென்று தெரியுமல்லவா. தமிழ் சினிமாவில் மிக அரிதாக, அழகாக, நெகிழ்வாகக் காண்பிக்கப்படும் ஒரு உறவு மாமனார்- மருமகன் உறவு. இத்தனையாண்டுகள் ஆனாலும் மௌனராகம் படத்தில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் சிறிய சம்பாஷனைகள் இன்றும் நினைவில் இருப்பதற்கு காரணம் அதன் அரிதான...
“இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டம் எழுச்சியுற்று எங்கள் கூட்டணியை வெற்றியடைய வைக்க இருக்கின்றனர். எங்களுக்குப் போட்டி என்று நினைக்கும் எதிர்க்கட்சியினர், எதிரணியினர் அனைவரும் ஓடி ஒளிவது உறுதி” என்று முழங்கினார் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சையாகக் களம் இறங்கும் ஓ...
“தினமும் காலைல ஐம்பது நூறு செலவழிச்சு டிபன் சாப்பிட முடியாது சார். ரெண்டு வடை, ஒரு மொச்சை. காலைல ஏழு மணிக்குச் சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பினா மதியம் வரை பசிக்காது. பசிச்சா இருக்கவே இருக்கு இன்னும் ரெண்டு வடை பதினோரு மணிக்கு. சாயங்காலம் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது ரெண்டு பஜ்ஜி. இல்ல...
“மாடுகளுக்கு எப்பொழுது பாய வேண்டும், எப்பொழுது துள்ள வேண்டும், எப்பொழுது தூக்க வேண்டும் என்பவை உள்ளூர நன்கு தெரியும். மைக் சத்தம் கேட்டதும் அவை தயாராகிவிடும். மாடுபிடி வீரர்கள் திமிலைப் பிடித்துத் தொங்கும்போது எப்படிச் சுழன்றால் அவர்கள் தெறித்து விழுவார்கள் என்பதை மாடுகள் நன்கு அறியும் வண்ணம் தான்...
மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சென்ட்ரல் திரையரங்கத்தின் டிக்கெட் கிழிக்கும் பெரியவர் அந்தச் சிறுவனைப் பார்த்ததும், “இன்னிக்குமாடா?” என்று கேட்பார். “எங்க தலைவர் படம் நான் பாக்காம யார் பாப்பா?” என்றவாறு உள்ளே சென்ற அவன் அறுபதாவது நாளாகத் தொடர்ந்து பார்த்த திரைப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ மதுரை...