உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதால் இது வியப்பையோ அதிர்ச்சியையோ வேறெதையுமோ தரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்தத் தலைவர், அந்தக் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்பட்சத்தில் ஸ்டாலினுக்கு அடுத்த முதலமைச்சர் அவர்தான்...
Tag - மு.க. ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவாரா?. தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இன்றைக்கு இதுதான் விவாதிக்கப்படுகிறது. விடை மிகவும் எளிமையானது. சினிமாவில் நடிப்பீர்களா என்றதற்கு வாய்ப்பேயில்லை என்றார். நடித்தார். அரசியலுக்கு வருவீர்களா எனக் கேட்டதற்கு அமைதியாக விலகிச் சென்றார்...
நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. பபாசி என்கிற தனியார் அமைப்பு (தென்னிந்திய பதிப்பாளர்கள்-விற்பனையாளர்களின் கூட்டமைப்பு) நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி, ஆண்டுக்கொரு முறை ஜனவரி மாதத்தில் நடைபெறும். சென்னையின் மிகப்பெரிய கலாசார-பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகக்...
சென்னை வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. 88 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சுமார் 394 கோடி பொருட்செலவில் கட்டியிருக்கிறது. அதிமுக...
நம் நாட்டில் சாதியும் மதமும் அரசியலின் துணைக் கருவிகள். சாதாரண மக்களின் ஆவேச உணர்ச்சியை எளிதாகத் தூண்டி, அமைதியைக் குலைப்பதற்கு இவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட நாள்களாக இங்கே உள்ளது. சாதிகளை ஒழிப்போம், மதவெறி இல்லா தேசத்தை உருவாக்குவோம் என்று யாராவது பேசுவார்களேயானால், அதுவும் ஓட்டு அரசியலின்...
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வையும் அதன் சித்தாந்தங்களையும் எதிர்க்கும் கட்சிகள் INDIA கூட்டணியில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றன. பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகள் வழக்கம்போல மோடியின் ஒற்றைத் தலைமையை ஆதரித்து வருகின்றன. INDIA...
மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தை விமரிசனம் செய்த குற்றத்துக்காகப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி தமிழ்நாட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, மூன்று நாள்களுக்குப் பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார். பத்ரி சேஷாத்ரியின் மணிப்பூர் தொடர்பான கருத்துகள் ஏற்கத்தக்கவையல்ல. சிந்திக்கத் தெரிந்த எந்த...
“சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றால் மதுரை தமிழ்நாட்டின் கலை நகர். எனவேதான் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய வேண்டும் என்று முடிவு செய்ததும் அது மதுரையில் தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்” என்றார் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின். “இந்நூலகத்தின் மூலம் தென்மாவட்டங்களில் அறிவுத் தீ பரவப்...
உணவு, உடை, உறைவிடம் என்கிற மூன்று அடிப்படைகளில் சிக்கல் இல்லாத நிலை உண்டாகும்போது கேளிக்கை என்னும் நான்காவது அம்சத்தைத் தேடிச் செல்வதே மனித குலத்தின் இயல்பாக ஆதிகாலம் முதல் இருந்து வந்திருக்கிறது. போதை என்பதைக் கேளிக்கையின் ஓரங்கமாக நாம் கொள்ள இயலும். ஓர் அரசு இதனை மட்டுப்படுத்தலாம், தேட வைக்கலாம்...
ரெய்டு, கைது, விசாரணை என்பதெல்லாம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கோ, மக்களுக்கோ புதிதல்ல. ஊழலை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு மறக்கப் பழகிவிட்டோம். ஓர் ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைதாகி தண்டனை பெறும்போதுதான் அது ஓரளவு மதிப்புப் பெறுகிறது...