போர் நிறுத்தத்தைக் கைவிட்டு இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதால் காஸா மீண்டும் போர்க்களமாகியுள்ளது. கடந்த ஜனவரியில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இந்தத் தாக்குதல்களால் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய கொரில்லா...
Tag - ஹமாஸ்
காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நல்லபடியாகத் தொடங்கியது. ஞாயிறு அன்று இஸ்ரேல் பணயக் கைதிகள் மூவரை ஹமாஸ் விடுவிக்க, தங்கள் சிறையில் இருந்த தொண்ணூறு பாலஸ்தீனிய பெண்களையும் சிறுவர்களையும் இஸ்ரேல் விடுவித்தது. அக்டோபர் ஏழு தாக்குதலில் கொல்லப்பட்ட யூதர்களுக்குப் பதிலாக நாற்பது மடங்கு...
ஐ.நா. நிர்வாகப் பணிக்குழுவை இஸ்ரேல் தடை செய்துள்ளது. “வடக்கு காஸா தற்போது பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களனைவரும் இறக்கும் நிலை வெகுவிரைவில் ஏற்படப்போகிறது.” என்று மீண்டும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஐநா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ். இப்படி எத்தனையோ...
நெத்தன்யாகுவைக் குறி வைத்து ஆளில்லாத வீட்டுக்கு ஏவுகணையை அனுப்பியது ஹிஸ்புல்லா. இவர்கள் திட்டம் போட்டுத் தோல்வியைத் தழுவ, திட்டமிடாமல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டுள்ளார்.கடந்த வருடம் அக்டோபர் ஏழாம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலை வடிவமைத்து...
ஹமாஸை ஒழித்து பணயக் கைதிகளை மீட்கப் போரை ஆரம்பித்தது இஸ்ரேல். இரு இலக்கு. ஒர் ஆண்டு. 40000க்கும் மேற்பட்ட அப்பாவிகளை கொன்று குவித்த பிறகும் இலக்கை அடையவில்லை. அதனாலென்ன புதிய இலக்குடன் லெபனான், ஈரான் பக்கம் போகலாம். நம்மை யார் கேட்கப் போகிறார்கள் என்கிற நினைப்பில் படுகொலைகளைத் தொடர்கிறது இஸ்ரேல்...
ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸருல்லா கொல்லப்பட்டிருக்கிறார். லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது செப்டம்பர் 28ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். “எங்கள் நீண்டகால எதிரி கொல்லப்பட்ட பிறகு, உலகம் பாதுகாப்பான, வாழத் தகுந்த இடமாக மாறியிருக்கிறது” என்கிறார் இஸ்ரேலின்...
கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பழிக்கு-பழி கொலைகள் நாடுகளைக் கடந்து எல்லைகளைக் கடந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அழிக்க பேஜர் தாக்குதல்களைச் செய்தது இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை என்று...
“இஸ்ரேலிய மக்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைக்கிறார் அதிபர் நெதன்யாகு. ஃபிலடெல்பியா காரிடரில் இஸ்ரேலியப் படையை நிறுத்துவதெல்லாம் பெரிய ஏமாற்று வேலை” என்கிறார் இலாய் அல்பாக், காஸாவில் பிணைக்கைதியாக இருக்கும் லிரி அல்பாகின் தந்தை. காஸாவின் கிழக்கில் அமைந்துள்ள எகிப்துடனான எல்லை தான்...
“ஒரு தலைவன் மடிந்தால் இன்னொரு தலைவன் வருவான்…” ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனியிடம் விடைபெறும்போது, இஸ்மயில் ஹனியா, கடைசியாகச் சொன்னது இதுதான். சில மணி நேரங்களில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அச்சொற்கள் அவருடைய கடைசிச் செய்தியாக மாறிவிட்டன. புதிதாகப் பதவியேற்ற ஈரான் அதிபருக்கு வாழ்த்துச் சொல்ல...
“எவ்வளவு சீக்கிரம் ஆயுத உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வரும்.” என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரின்போது அவர் கூறிய இதையேதான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இன்று அமெரிக்காவிடம் கேட்கிறார். “உங்கள் விரைவான உதவிகள்...