பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம் என்றும் சொல்லிக்கொண்டேன். இன்னும் அரை நாழிகை நடந்தால் அவனது ஆசிரமத்தை நெருங்கிவிடலாம். கடமையைச் செய்து முடித்த பின்பு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்...
Tag - சலம்
50. மூன்று நாழிகை சிசிர ருது தொடங்கிய முதல் நாள் பிரம்ம முகூர்த்த நாழிகையில் நாங்கள் வித்ரு தென்படும் தொலைவைச் சென்றடைந்தோம். அம்முறை வழக்கத்தினும் அதிகமாகப் பனி பெய்துகொண்டிருந்தது. சாரனுக்குப் பனிப் பொழிவு ஒரு பொருட்டாக இல்லை. ஹிமத்திலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதை நான் அளித்த கம்பலத்தை...
49. மகரம் நதியின் ஊடாகவே நடந்து, ருத்ர மேருவைக் கடந்து கரையேறியபோது குளிர்க் காய்ச்சல் கண்டது. உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. என்னால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. மெல்ல மெல்ல சுய நினைவிழந்து அனத்தத் தொடங்கினேன். அந்த சூத்திர முனி என்னைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிது தூரம் நடந்தான். பிறகு...
48. பிரம்ம சித்தம் பிரம்மத்துக்குப் பதற்றம் என்ற ஒன்றில்லை. பதற்றம் இல்லாத சிந்தை பரிதவிப்பதில்லை. பரிதவிப்பு உணர்ச்சிகளினால் பின்னப்படுகிற ஒரு வலை. எனவே பிரம்மம் உணர்ச்சிகளைக் களைந்தது. ஆனால் மிகக் கவனமாக மனித மனத்தை உணர்ச்சிகளின் மூலக்கூறுகளைக் கொண்டு வடிவமைத்த வினோதத்தைச் சிந்திக்கிறேன்...
47. அஹிபுதன்யன் நான், கிராத குலத்தைச் சேர்ந்த சார சஞ்சாரன். அதர்வன் என்னும் பிராமணனைக் கொலை செய்வதற்காகச் சென்றுகொண்டிருப்பவன். இது எனக்களிக்கப்பட்ட ஒரு ராஜாங்கப் பணி. சரியாகச் செய்தால், எங்கள் ராஜன் என்னைப் பாராட்டுவான். பரிசிலளித்து கௌரவிப்பான். ஒருவேளை என் முயற்சியில் நான் தோற்க நேர்ந்தால்...
46. மாயத் திரை பதற்றமும் நடுக்கமும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. பைசாச வாழ்வில் பதற்றம் என்ற ஓர் உணர்ச்சிக்கு இடமே இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஏனெனில் எங்கள் உலகத்தில் எதிரிகள் கிடையாது. துரோகிகள் இருக்க முடியாது. யாரும் யாரையும் அழிக்க முயற்சி செய்வதில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றும்...
45. சொல்லில் விளைந்தவன் தன் மனத்துக்குள் நுழைந்து தகவலைத் தூவிச் சென்றது அதர்வனாக இருக்கலாம் என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டு சாரன் தூங்கியேவிட்டான். உறக்கம் முற்றிலும் இல்லாமல் போய், நான்தான் எதையெதையோ எண்ணித் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். தான் சொன்னதன் அடர்த்தி என்னவென்றாவது அவனுக்குத்...
44. சண்டாளன் மனத்தின் ஒரு துளியைக் கிள்ளி வெளியே சுண்டிவிட்டாற்போல இருள் அடர்ந்து கவிந்திருந்தது. கானகத்தின் தருக்கள் உறங்கத் தொடங்கிவிட்டன. பட்சிகளும் சிறு மிருகங்களும் உறங்கப்போய்விட்டன. பூச்சிகளின் ஓசையும் அடங்கத் தொடங்கியிருந்த பொழுதில் சரஸ்வதி மட்டும் தன் தாளகதி பிசகாமல் சத்தமிட்டுப்...
43. காணாத காட்சி ‘கானகத்தைத் தாண்டினால் ஒரு குன்று, குன்றின் மறுபுறமாக ஆறு காதம் கடந்தால் அந்த பிராமணனின் இருப்பிடம் வந்துவிடும் என்று நீ எப்போது என்னிடம் சொன்னாய்?’ என்று அந்த சூத்திர முனியிடம் கேட்டேன். அவன் என்னை வினோதமாகப் பார்த்தான். ‘நான் எப்போது சொன்னேன்?’ என்று என்னையே மீண்டும் கேட்டான்...
42. ஒற்றைத் தர்ப்பம் பகைவரின் கோட்டையைப் பதுங்கி நெருங்கும் படையினைப் போல வனத்துக்குள் நுழைந்த நதி சுழித்துச் சுருண்டோடத் தொடங்கியது. கவனத்தை நான் அதன் தடத்தின்மீது பதித்தபோது எட்டு பைசாசங்கள் எதையோ தேடி அலைந்து திரிவது முதலில் தென்பட்டது. கணப் பொழுதில் எனக்கு விளங்கிவிட்டது. கன்னுலா தேவி...