90. ஒரே ஒரு பிழை நான் குத்சன். என்னைப் போன்றதொரு பாக்கியசாலியை இந்தப் பிருத்வி என்றென்றும் காணப் போவதில்லை. நான் தோல்விகளின் ஸ்தூலம். என்னைவிட இன்னொரு அபாக்கியசாலி பிரளயத்துக்குப் பிறகு உதிக்கவிருக்கும் இன்னொரு யுகத்திலும் இருக்க வாய்ப்பில்லை. நான் அடைந்தவை அநேகம். இழந்தவை அநேகம். கண்டவை அநேகம்...
Tag - சலம்
89. மூடன் ருத்ர மேருவின் சிகரத்திலிருந்து அப்போதுதான் இறங்கி வந்திருந்தேன். பாறைகள் நிறைந்த சர்சுதியின் கரைக்கு வந்து சேர்ந்தவுடனேயே பசிக்கத் தொடங்கியது. எத்தனை தினங்கள் உண்ணாதிருந்திருக்கிறேன் என்ற நினைவே இல்லை. அது ஒரு பொருட்டாகத் தோன்றவுமில்லை என்பது மிகுந்த நிறைவை அளித்தது. அதே சமயம் தாயைக்...
88. சிக்ஷாவல்லி வெளி இருண்டிருந்தது. குளிர் சற்று அதிகமாக உள்ளதாக சாரன் சொன்னான். அப்படியா என்று கேட்டேன். அவன் புன்னகையுடன் என்னையே சில கணப் பொழுதுகள் பார்த்துக்கொண்டிருந்தான். ‘என்ன?’ ‘உணர்ச்சிகள் இல்லாத நீ ஒரு பிணத்துக்குச் சமம் என்று பல சமயம் நினைப்பேன். ஆனால் சகிக்க முடியாத இந்தக்...
87. வெண் சங்கு நான் அவனைக் கொலை செய்யத்தான் வித்ருவுக்கு வந்தேன். அறிமுகமான உடனே அதனை அவனிடம் சொல்லவும் செய்தேன். என் கையால்தான் தன் மரணம் நிகழுமென்பதை அவன் அறிந்திருந்தான். அதைக் குறிப்பிட்டே அவன் என்னை வரவேற்றான். எங்கள் இருவரிடத்திலும் பொய் இல்லை. பாசாங்கில்லை. ஒளித்து மறைத்து ஒன்றைச் செய்யும்...
86. கூர் அவர்கள் கொந்தளித்துக்கொண்டிருந்தார்கள். அது சரஸ்வதி பாயும் சத்தத்தினும் பெரிதாக இருந்தது. அவர்கள் நா தப்பிப் பேசத் தொடங்கினார்கள். அது உலூகத்தின் ஓலம் போலிருந்தது. எங்கே, யார் முன்னே நிற்கிறோம் என்பதை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருந்தார்கள். குடம் குடமாகச் சோமத்தைக் குடித்துவிட்டு கீழே...
85. நியாயமும் தருமமும் அவர்கள் நெடுநேரமாகக் காத்திருந்தார்கள். மகரிஷி இப்போது வந்துவிடுவார் என்று ஒவ்வொருவரும் திரும்பத் திரும்பத் தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார்கள். ஆசிரமத்திலிருந்து வெளியே வரும் சீடர்கள் ஒவ்வொருவரிடமும் ஓடோடிச் சென்று மீண்டும் மீண்டும் அவர் எப்போது வருவார், எப்போது வருவார் என்று...
84. பொருள் நான் விருத்திரன். கிராத குலத்தைச் சேர்ந்த சார சஞ்சாரன். எனக்குக் கடவுள்களுடன் பரிச்சயம் கிடையாது. என் தங்கை தெய்வமான பின்பு வேறெந்த தெய்வத்தையும் நினைத்தது கிடையாது. எனக்கொரு நெருக்கடி உண்டாகுமானால் அவள் பார்த்துக்கொள்வாள் என்று நினைத்துக்கொள்வேன். ஏதோ ஒன்று நடக்கும். நெருக்கடிகளினின்று...
83. விருத்திரன் நான் சரியாகத்தான் இருந்தேன். தெளிவாகவும் இருந்தேன். சுகக்கேடு ஏதும் உண்டாகியிருப்பதாகத் தெரியவில்லை. நிற்க, நடக்க, ஓட, குதிக்க எல்லாம் முடிந்தது. பேச்சு தெளிவாக இருந்தது. செவியில் விழும் ஒவ்வொரு ஒலியும் துல்லியமாக இருந்தது. எப்போதும் போலச் சிந்தித்தேன். அதிலும் சிக்கலேதும்...
82. ஒளியும் நிழலும் அவன் ஒரு முனி என்று மகரிஷி அத்தனை பேர் முன்னிலையில் சொன்னபோது எனக்கு அது ஒரு புகழ்ச்சி, பாராட்டு, அங்கீகாரம் என்ற அளவில் புரிந்தது. மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் எட்டடி தொலைவைக் கணக்கிட்டு நின்று மண் பார்த்துப் பேசியே...
81. புலப்படும் வெற்றிடம் நான் உணர்ச்சிவசப்படக் கூடாது. நான் அழக்கூடாது. நான் பக்கச் சார்பெடுக்கக் கூடாது. தனியொரு ஜீவனின் சுக துக்கங்கள் என்னை அசைக்க இடம் தரலாகாது. எனக்கு நியாயமென்று ஒன்றில்லை. மகரிஷி பேசும் தருமம்தான் எனக்கும் இறை. ஒரு வித்தியாசமுண்டு. நான் மனிதப் பிறப்பெடுத்து, இறந்தபின்...