இவ்வுலகில் வாழும் உயிரினங்களுக்கு மட்டுமே வேறுபட்ட தரத்தில் அறிவும் திறனும் உள்ளது என்பது அண்மைக்காலம் வரையில் இருந்த நிலவரம். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் ஜடப் பொருட்களுக்கும் திறனும் செயற்கை நுண்ணறிவும் வந்து சேரத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போவது பல வகையான...
Tag - இன்குபேட்டர்
உலகில் நடைபெறும் தொழில்நுட்பக் காட்சிகளில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் சி.இ.எஸ். (CES) முக்கியமானதொன்றாகும். இத்தொழில்நுட்பக் காட்சியில் பல நிறுவனங்கள் தங்கள் புதிய ஆக்கங்களின் முன்மாதிரிகளை (Prototypes) காட்சிப்படுத்துவார்கள். 2023-இல் அஸ்கா (ASKA) நிறுவனம் அவர்களது பறக்கும் காருக்கான...
மெய்நிகர் உலகில் விளையாடும் போது நமக்கென ஒரு அவதார் உருவாக்குகிறோம். அங்கு அந்த அவதார் நம்மைக் குறிக்கிறது. இந்த அவதார் நமது பொழுதுபோக்குக்கானதே தவிர நமக்கு வேறு எந்த விதத்திலும் உபயோகமற்றவை. டிஜிட்டல் ட்வின் என்பது இவ்வுலகில் இருக்கும் ஒரு பொருளை அப்படியே டிஜிட்டல் வடிவில் உருவமைப்பது...
வானொலி கேட்கும் போதோ அல்லது தொலைபேசியில் பேசும் போதோ மற்றவர்களின் குரலை நம்மால் கேட்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் சூழலின் ஒலி வடிவங்களையும் நம்மால் கேட்க முடிகிறது. சினிமா, தொலைக்காட்சி, இணையத்தில் அல்லது நாமே பதிவு செய்த காணொளிகளில் நம்மால் காட்சி வடிவங்களைப் பார்க்க முடிகிறது. அத்துடன்...
அசைவ உணவுப் பிரியர்களுக்காக ஆடு, மாடு, பன்றி போன்ற மிருகங்கள், கோழி போன்ற பறவைகள் வளர்க்கப்படும் பண்ணைகள் எல்லா நாடுகளிலும் உண்டு. இப்பண்ணைகளின் முக்கிய நோக்கம் அவர்கள் வளர்க்கும் மிருகங்களையும் பறவைகளையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதே. அண்மைக் காலங்களில் மிருகங்களை உணவுக்காக வளர்த்தாலும் அவற்றை...
ஆடைகளை வாங்கும்போது முக்கியமான பிரச்சினை அவை நமக்கு அளவாக இருக்குமா? என்பதே. எந்த ஒரு ஆடையையும் அணிந்து பார்க்காமல் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. பொதுவாக சைஸ் என்று ஒன்று லேபலில் போட்டிருப்பார்கள். அது அளவுக்கான ஒரு அண்ணளவான வழிகாட்டி மட்டுமே. அதை மட்டுமே நம்பி நமக்குச் சரியாகப்...
முப்பரிமாண அச்சு இயந்திரம் (3D Printer) பற்றி அறிந்திருப்பீர்கள். மூலப்பொருட்களைக் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட அளவில் அடுக்கடுக்காக அச்சிடுவதன் மூலம் முப்பரிமாணத்தில் பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இது. இது எண்பதுகளின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம். நாற்பது ஆண்டுகளில்...
பச்சை குத்துதல் என்பது பண்டைக் காலத்திலிருந்து பல சமூகங்களில் இருக்கும் ஒரு நடைமுறை. பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பச்சை குத்திக் கொண்டார்கள் என்பது மனித வரலாற்றில் உள்ளது. தற்காலத்தில் தமது தனித்தன்மையைப் பலரும் பச்சை குத்தி உலகுக்குக் காட்டி மகிழ்வர். இது காதலி, மனைவி, காதலன்...
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பு “ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை”. பிரமாண்டமான எதையும் குறுகிய காலத்தில் உருவாக்க முடியாது என்பதே இதன் அர்த்தம். இப்பழமொழி உலகில் உருவாக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும். இன்று நாம் சர்வ சாதாரணமாகத்...