‘இசை எங்கிருந்து வருகிறது?’ என்ற ஆதாரக் கேள்வி, இந்தத் தலைமுறையில் நகைப்புக்குரிய இன்னொரு பழங்கேள்வியாக ஆக்கப்பட்டு அடித்துத் துவைக்கப்பட்ட ஒன்று. உலகின் எல்லா வகையான இசையும் இன்று நம் கையளவு உலகத்தில் ஒலிபரப்பப்பட்டு கேட்டு ரசிக்கக்கூடிய காலம் வந்துவிட்ட பிறகும், முன்பிருந்த அதே இசை ரசனையும்...
Tag - இளையராஜா
இளையராஜா எப்படி இசையமைக்கிறார் என்பதைப்போலவே இன்னொரு மில்லியன் டாலர் கேள்வி, இன்ன பாடலை இன்னார்தான் பாட வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்கிறார் என்பதும். பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதிக்கொண்டிருக்கும்போதே, அவர் மனதில் தோன்றும் பாடகர் / பாடகி பெயரை இசைத்தாளின் ஓரத்தில் எழுதி விடுவார்...
“அந்தப் பாட்டைப் பாடும்போது இருந்த ஒரு பதட்டம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. எப்பவும் அப்பா எப்படிச் சொல்றாரோ அப்படிப் பாடினாப் போதும். பாடிட்டு போயிடுவேன். ஆனா இந்தப் பாட்டின்போது என் உள்ளுணர்வில் இந்தப் பாட்டில் நான் ஏதாவது செய்துவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த அளவு மனசு லேசா...
முன் குறிப்பு: இளையராஜா இசையமைக்கும் விதம் குறித்து மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் – அருகிருந்து பார்த்து, எழுதப்பட்ட கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் கார்த்திகேயன் நாகராஜன், பல்லாண்டுக் காலம் இளையராஜாவுடனும் அவரது இசைக் குழுவினருடனும் நெருங்கிப் பழகியவர். இளையராஜாவின் சிறப்புகளை சர்வதேச...
இளையராஜாவை, திரைப்பட இசையமைப்பாளர் என்று வரையறுப்பது பிழை. இந்திய மண்ணில் உதித்த சில மாபெரும் மேதைகளுள் அவர் ஒருவர். அவருடைய திரைப்படங்களின் எண்ணிக்கையோ, அவர் இசையமைக்கிற வேகமோ, அவருடைய பாடல்கள் ஹிட்டான சதவிகிதமோ, அவர் சம்பாதித்த பணமோ, புகழோ, வாங்கிய விருதுகளோ ஒரு பொருட்டில்லை. இவையெல்லாம் வியந்து...
‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?’ என்று ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதியிருப்பார். அதுதான் உண்மை. இசை மொத்தமும் இந்த ஏழு ஸ்வரங்களை வைத்துத்தான். அதற்குள் எத்தனை எத்தனை புதிய பாடல்களை உருவாக்குகிறார்கள், காலத்தில் நிலைக்க வைக்கிறார்கள் என்பதே இசையமைப்பாளர்களின் பெருமை. ஆனால்...
இசை இல்லாமல் தமிழர் வாழ்வு இருந்ததில்லை. நமது வாழ்விலும் மொழியிலும் இசையின் தாக்கம் எத்தகையது என்பதற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளை அளிக்க முடியும். தமிழ்மரபின் மூத்த இறைவடிவமான சிவனையே கூத்தன் என்ற அடைமொழி கொடுத்து வழங்கிய இசைப்பெயரின் மூலம் அது இயல்பாக விளங்குகிறது. தமிழில் விளங்கும் அரிய...
என் பெரிய தகப்பனார் பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றினார். பணியின் பொருட்டு அவர் பல நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர். பெரும்பாலும் அவை காவிரியைச் சுற்றிய நகரங்களாகத்தாம் இருந்தன. அத்தகைய பணிச்சுற்றில் சில ஆண்டுகள் ஈரோட்டுக்கருகிலுள்ள முத்தூரில் குடியிருந்தார். அவ்வமயம் அவர் வீட்டில் விழாவும்...
இளையராஜா கடந்து வந்த பாதையில் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது இக்கட்டுரை. பிறப்பு பண்ணைபுரம், தேனி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரக் கிராமம். கோவில்பட்டி சூரங்குடியிலிருந்து ராமசாமி என்பவர் பஞ்சத்தினால் பண்ணைபுரத்திற்குக் குடிபெயர்ந்தார். மதுரை கலெக்டருக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் எஸ்டேட்...