காஸா கடற்பகுதியில் அவசரமாக ஒரு கப்பல்துறையை அமைக்கவிருக்கிறது அமெரிக்கா. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அந்தக் கப்பல்துறை மூலமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் இன்னும் முடிந்தபாடில்லை. ஐந்து...
Tag - இஸ்ரேல்
“ரஷ்யாவின் அழகான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருக்கிறேன். இங்கு மனதை வருடும் தென்றல் வீசுகிறது, அதிக வெப்பமோ, குளிரோ இல்லை. என்னைச் சுற்றி மக்கள் இயல்பாக நடமாடுவதை நீங்களே பார்க்கிறீர்கள். போர் நடப்பதெல்லாம் உக்ரைன் எல்லையில் மட்டுமே. ஊருக்குள் ஒன்றும் பிரச்சனை இல்லை. இங்கிருந்து பின்லாந்து...
பாராசூட்டில் பறந்து வந்த உணவுப் பொருள்கள் அடங்கிய பிரம்மாண்டப் பெட்டி காஸா அகதி முகாம் வீடு ஒன்றின் மீது விழுந்ததில் உள்ளிருந்தோர் இறந்தனர். பாராசூட் மெதுவாகத் தரையிறங்கித்தான் கீழே நிற்கும். உணவுப் பெட்டிகளைத் தாங்கி வந்த ஏழெட்டுப் பாராசூட்கள் என்ன காரணத்தினாலோ விரியாமல் போயின. இதனால், உணவுப்...
பாலஸ்தீன் ஸ்டேட் என்கிற தீர்வை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவ்வப்போது சொல்லி வருகின்றன. இஸ்ரேல் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது. சமீபத்தில் பைடன், ஏதோவொரு விதத்தில் பாலஸ்தீன் ஸ்டேட் அமைவதை நெதன்யாகு ஒப்புக்கொள்வார் என்று நம்புவதாகத் தெரிவித்தார். ஷபாத் நாளாக இருந்தாலும் பரவாயில்லை என்று...
இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா. காஸாவில் இருபத்தியோராயிரத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருகிறது என்பது தென்னாப்ரிக்காவின் குற்றச்சாட்டு. கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு தங்கள் நாட்டுப் பொதுமக்களைக் கொன்றதற்குப் பதிலடியாக இஸ்ரேல்...
அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, பிரிட்டன், கனடா, ஜெர்மன், இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம், ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, பஹ்ரைன்… இந்தப் பன்னிரெண்டு நாடுகள் இணைந்த கூட்டமைப்பு செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பு தாக்குதலை உடனே நிறுத்தவேண்டும் என்று கடுமையாக எச்சரித்தது. முன்னதாக வர்த்தகக் கப்பல்...
காஸ்பெல் (Gospel) என்கிற ஹீப்ரூ சொல்லுக்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று நற்செய்தி கொண்டு வரும் தூதுவன் என்ற நேரடிப் பொருள். இரண்டாவது, இவ்வாறு நற்செய்தி அருளப்படும் நாளில், இறையை நோக்கி வணங்கும் வழிபாடு என்ற உட்பொருள். இப்படி நற்செய்தி, வழிபாடு என்ற உயர் ஆன்மிக வார்த்தையைத்தான் பேரழிவு ஏற்படுத்தும்...
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது பழங்காலச் சொலவடை. அமெரிக்கா அன்றி ஓரணுவும் அசையாது என்பது நவீனச் சொலவடை. அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நிகழும் உரசல்களில் ஜனநாயகம் பக்கம் நிற்பதை அடியொட்டியே பன்னாட்டுக் கொள்கைகளில் முடிவெடுக்கிறார்கள். மக்களின்...
இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸாவில் மூன்று யூதர்களைத் தவறுதலாக கொன்றது. பாலஸ்தீன ஆயுதக் குழுவால், அக்டோபர் 7 ஆம் தேதியன்று பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட இம்மூவரும் தப்பித்தோ அல்லது விடுவிக்கப்பட்டோ சென்று கொண்டிருந்தபோது அவர்களை பாலஸ்தீனியத் தீவிரவாதிகள் என்றெண்ணிச் சுட்டதாக இஸ்ரேல்...
பென்சில்வேனியாவில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவின் செனெட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனுக்கு இரண்டு சிறப்புத் தகுதிகள் உண்டு. அமெரிக்க செனெட்டர்களிலேயே மிகக் குறைந்த வயதில் (29) தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும், அமெரிக்க அதிபர்களிலேயே மிக அதிக வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும்...