நமீபியாவின் முதல் பெண் அதிபராகப் பதவியேற்றிருக்கிறார் நெடும்போ நந்தி தைத்வா. கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஐம்பத்தேழு சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றிருக்கிறார் நெடும்போ. எதிர்த்துப் போட்டியிட்ட பண்டுலேனி இடுலாவால் இருபத்தாறு சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இருண்ட கண்டம்...
Tag - உலகம்
“நானும் அவனும் வாழ்வது முப்பது நிமிடத் தொலைவில். நான் சுதந்திரப் பிரஜை. அவனோ சிறைக்கைதி. எனக்கு வாக்குரிமை இருக்கிறது. அவனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்த விழா முடிந்ததும் நான் இஸ்ரேலுக்குத் திரும்பிப் போவேன். அவனோ, ஆக்கிரமிக்கப்பட்ட காஸாவுக்குள் நுழைந்திடுவான்.” இஸ்ரேலிய திரைப்படக் கலைஞரான...
மேற்கூரை இடிவதெல்லாம் நமக்கு ஒரு செய்தியே இல்லை. சென்னை விமான நிலைய மேற்கூரை எத்தனை முறை இடிந்து விழுந்திருக்கிறது என்பதை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில்தான் தேட வேண்டும். ஆனால் செர்பியாவில் ஒரு ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பதினைந்து பேர் பலியான சம்பவத்தின் தொடர்ச்சி, ஒரு மாபெரும் மாணவர்...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திடீர் திடீரென்று ஏதாவதொரு சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பெரும்பாலும் புதுமையான திட்டமாக இருக்கும். இது பலகால வழக்கம். இப்போது சுற்றுலா மட்டுமல்ல; மக்கள் நெஞ்சைத் தொடும் விதமான வேறு பல நலத்திட்டங்களும் ஆண்டுக்கொன்றாவது அறிமுகமாகின்றன. அறிமுகமாவது பெரிதல்ல. அவை...
‘போரை முடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ தொலைபேசியில் டிரம்புடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரஷ்ய அதிபர் புதின் இப்படித்தான் அறிக்கையைத் தொடங்கியிருந்தார். நாமும் இப்படித் தொடங்குவதுதான் இனிவரும்...
கனடா நாட்டின் புதிய பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னி பதவி ஏற்றுள்ளார். முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பத்து வருட காலம் அந்தப் பதவியில் இருந்த பின்னர் மக்களின் அதிருப்தி காரணமாகப் பதவி விலகினார். இன்னும் ஆறு மாதங்களில் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை மார்க் கார்னி பிரதமராகப்...
“அலுவலகங்களில் எனது படங்களை வைக்க வேண்டாம். நான் கடவுளோ, சின்னமோ அல்ல; மக்களின் ஊழியன் மட்டுமே. மாறாக, உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வையுங்கள், அவர்கள் என்னை விடச் சிறந்தவர்களாக வளர வேண்டும்!” இது செனகலின் புதிய ஜனாதிபதி பஸ்சிரோ டியோமயே ஃபே (Bassirou Diomaye Faye), தனது நாட்டு...
அமீரகத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாள்களை விநியோகிப்பதற்குப் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் வீட்டு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு, வாரத்திற்கு ஒரு முறை, அல்லது மாதம் முழுக்க என்று தேவைக்கு ஏற்றார் போல் அழைத்துக் கொள்ளலாம். இந்த நிறுவனங்களில் இந்தியா, நைஜீரியா, நேபாளம், பிலிபைன்...
வட துருவத்தில் உள்ள ஸ்பிட்ஸ்பெர்கன் என்ற யாருமறியாத தீவில் மனித குலத்துக்கே பலனளிக்கும் ஒரு பெருஞ்செயல் நடக்கிறது.
குவாதர் சர்வதேச விமானநிலையத்தின் உரிமையாளர் பாகிஸ்தான். பணம் கொடுத்தது சீனா. பயன்படுத்த யாருமில்லை. கடந்த வாரம் முழுக்க சொல்லிவைத்தாற்போல் எல்லா செய்தித்தளங்களும் பயணிகள் யாருமில்லாத விமான நிலையம் என கேலியான தொணியில் செய்தி வெளியிட்டிருந்தன. மற்றவர்களுக்கு எப்படியோ, இந்தியா அப்படிச் சிரிப்புடன்...