நியூசிலாந்து சென்ற வாரம் இரு சம்பவங்களால் உலக கவனத்தை ஈர்த்தது. ஒன்று அதன் பிரதமர் நாடாளுமன்றத்தில் இரண்டு லட்சம் மக்களிடம் மன்னிப்பு கோரினார். அந்நாட்டு அரசாங்கம் செய்த வரலாற்றுக் குற்றத்திற்காக. மற்றொன்று மவோரி மக்களின் உரிமையை நிலைநாட்டும் வைத்தாங்கி ஒப்பந்தத்தை அழிக்கும் மசோதாவை எதிர்த்து...
Tag - உலகம்
2024, நவம்பர் 15ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏடி அன் டி அரங்கில் ஏறக்குறைய எழுபதாயிரம் பார்வையாளர் அமர்ந்திருந்தனர். வெளியே கோடிக்கணக்கில் குத்துச்சண்டை ரசிகர்களும் விளையாட்டுப் போட்டி ஆர்வலர்களும் நெட்ஃப்ளிக்சின் லைவ் ஸ்ட்ரீமிங்கில் இணைந்திருந்தனர். அமெரிக்காவிலும் இந்தியாவிலும்...
வடமேற்கு சவூதி அரேபியாவில் உள்ள அல் பேட் என்ற இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் “நபாட்டேயன்” பற்றிய பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அரேபியத் தீபகற்பத்தில் கிமு 400 மற்றும் கிபி 106 வரை நபாட்டேயன் என்ற பழங்குடியினர் வாழ்ந்து வந்துள்ளார்கள். ஜோர்டானில் உள்ள பெட்ராவில், அவர்கள் இருந்ததற்கான...
47ஆவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். மக்கள் வாக்களித்துத் தீர்ப்பளித்து விட்டார்கள். ஜூரிகள் எழுதிய தீர்ப்புக்கு மேலாக இது பெருவாரியான மக்களின் தீர்ப்பு. வாக்குரிமையில்லாதவர்கள் கூட வாக்களிக்கலாம், கடவுளே வந்து வாக்குகள் எண்ணினால்தான் நான் வெற்றிபெறுவேன் என்றெல்லாம் டிரம்ப்பே சொன்ன...
கனடா – இந்தியா உறவை இன்னும் கொஞ்சம் சிக்கலாக்கியுள்ளது வாஷிங்டன் போஸ்ட். கனடாவில் இருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் மீதான தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அந்தக் கட்டளையைப் பிறப்பித்தவர் இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித் ஷா. இதற்கான ஆதாரங்களைக் கனடா நாட்டின்...
அமெரிக்கத் தேர்தல் கல்யாணம் தாலி கட்டும் கட்டத்தைத் தொட்டுவிட்டது. 700 இலட்சம் மக்கள் வாக்குப் பதிவு செய்துவிட்டனர். மக்களாட்சியில் ஒருவர் வெற்றியும் மற்றவர் தோல்வியும் பெறுவார். தோற்றவர் அன்றே தன் தோல்வியை ஒப்புக்கொள்வதோடு அமெரிக்கத் தேர்தல் முடிந்துவிடும். ஆனால், 2020இல் எப்போது முன்னாள் அதிபர்...
ஒரு கற்பனைக் கதாபாத்திரத்துக்கு பாஸ்போர்ட் கொடுத்திருக்கிறது பிரிட்டன். இம்மாதிரியான சுவாரசியங்களெல்லாம் இக்காலத்தில்தான் நடக்கும். பாஸ்டுசோ (Pastuso) என்ற கற்பனை கதாபாத்திரத்தின் பூர்வீகம் பெரு. நிலநடுக்கத்தால் எல்லாம் இழந்த பாவப்பட்ட ஜென்மம். அத்தைதான் ஒரே துணை. அத்தைக்கும் வயதாகிவிட்டது. எனவே...
ஐ.நா. நிர்வாகப் பணிக்குழுவை இஸ்ரேல் தடை செய்துள்ளது. “வடக்கு காஸா தற்போது பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களனைவரும் இறக்கும் நிலை வெகுவிரைவில் ஏற்படப்போகிறது.” என்று மீண்டும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஐநா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ். இப்படி எத்தனையோ...
நீதிமன்ற உத்தரவின் படி, முதன் முறையாகத் தனது தளத்திலிருந்து ஓர் ஆங்கிலப் பதிவை நீக்கி இருக்கிறது விக்கிப்பீடியா. இதற்கு முன் இல்லாத வகையில், சில எடிட்டர்களின் விவரங்களை வெளியிடவும் ஒப்புக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதும் இலவசமாகத் தகவல்களைத் தரும் இணைய என்சைக்ளோபீடியா-விக்கிப்பீடியா. அதன் மீது...
அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாச் சொர்க்கபுரியில் இருந்து தம் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அப்படி ஒரு நான்காம் தர எச்சரிக்கை அறிக்கையை விடுக்கும் என்று...