காணத் திகட்டாத கடல். உலகின் இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டை. தமிழின் முதல் அச்சுக்கூடம். அப்பர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம். டென்மார்க் நாட்டின் சாயலுள்ள தெருக்கள்… இவையெல்லாம் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்றால் நம்பத்தான் வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தரங்கம்பாடிக்கு...
Tag - சுற்றுலா
ஒருநாள் யானைக்குத் தாயாக இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை. துபாரேவுக்குப் போனால் அது நடக்கும். நன்கு குளிப்பாட்டி, வெயிலில் தலைகாய வைத்து, வயிறார ஊட்டிவிட்டு, அப்படியே தோளில் போட்டு உலவிக்கொண்டே குழந்தைகளைத் தூங்க வைப்போமில்லையா? இதைத்தான் நீங்கள் அங்கு வளரும்...
சாகசமும் சாந்நித்தியமும் அருகருகே இருக்குமா? இருக்கும். இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவன் சிலை அமைந்துள்ள முர்தேஷ்வருக்கு வாருங்கள். மங்களூருக்கு அருகில் அரபிக் பெருங்கடலோரம் இருக்கிறது இந்தக் கோயில். கோயிலின் ராஜகோபுரம் இருநூற்று முப்பத்தெட்டு அடியில் இருபது அடுக்குகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது...
முர்டேஷ்வர் கட்டுரை தனியாகப் படித்திருப்பீர்கள். தென் கர்நாடகத்தில் இம்மாதிரி மொத்தம் ஏழு முக்கியமான திருத்தலங்கள் உள்ளன. உடுப்பி, ஹொரநாடு, ஷ்ரிங்கேரி, தர்மஸ்தலா, முர்டேஷ்வர், கொல்லூர் மற்றும் சுப்ரமணியா என இந்த ஏழையும் சேர்த்து அங்கே சப்த க்ஷேத்திரங்கள் என்பார்கள். இவையனைத்துமே மங்களூரு மற்றும்...
அமிர்தசரஸ், சீக்கியர்களின் புனித நகரம். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பிரிவினையின் போது அமிர்தசரஸை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விடலாமா என்று கூட பிரிட்டிஷார் எண்ணினர். பாகிஸ்தானுக்கு அவ்வளவு பக்கம். பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் அங்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புனிதத் தலம்...
மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த வாழ்க்கைக்குப் புதிய புதிய நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டுவந்து சேர்க்கக் கூடும். புதிய புதிய வானங்களையும்...
நம் மக்கள் சிறிது யோசித்துவிட்டுத்தான் ரசிப்பார்கள். ஆனால் ஓர் அழகு என்பது எங்கிருந்தாலும் அழகுதானே. இலங்கையின் சிங்கள, பௌத்தக் கிராமங்களுக்கென தனித்த அழகு ஒன்று இருக்கிறது. தூரத்திலிருந்து அந்தக் கிராமங்களை அண்மிக்கும் போது உங்களுக்கு முதலில் சமவெளியான வயல்வெளிகள் தெரியலாம். வயல்வெளிகளை ஊடறுத்துச்...
அந்தக் காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்கக் கால்கள் கற்றுத் தருகின்றன, நீண்டு நடக்கவும், நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து...
இந்தியாவை, அதன் மாநிலங்களை, அதன் கலை, கலாசார, பாரம்பரியங்களை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் செழித்து வளர்ந்த பண்பாடுகளை, வாழ்வைத் துறந்து நடந்த மனிதர்களின் கால் தடங்களை, அவர்கள் ஆண்டாண்டு காலம் போதித்து நடந்த தத்துவங்களைப் பின்பற்றி நடக்க விரும்பினேன். பட்டப்படிப்பின் பின், ஒரு தொழில்...
நுவரெலியாவுக்குப் புதிதாக வருகிறீர்களா? உங்கள் கையில் இருக்க வேண்டியது சுற்றுலா விவரப் புத்தகமல்ல. கம்பராமாயணம். இங்கே ஒரு கோயில் இருக்கிறது. ‘சீதாஎலிய’ அம்மன் கோயில். நமக்கு முன்னால் – ராமாயண காலத்தில் ராமருக்கும் ஆஞ்சநேயருக்கும் முன்னால் இலங்கைக்கு வந்தவளல்லவா சீதை? அந்தத் தொடர்பு...