முதலமைச்சர் ஸ்டாலின் ‘நிர்வாகக் காரணங்களுக்காக’ச் செய்த அமைச்சரவை மாறுதல்களின் உண்மையான காரணங்கள் பற்றிய விவாதங்கள் கடந்த வாரத்தின் ஹைலைட். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல் முறை எம்எல்ஏ ஆனதும் கிடைத்த அமைச்சர் பதவியால் மகிழ்ச்சியில் இருந்தவர் நிர்வாகத்தில் கோட்டை...
Tag - திமுக
பலம் பொருந்திய பாரதிய ஜனதாவிடமிருந்து பாரத தேசத்தைக் காக்க வேண்டுமானால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தக் கருத்தைச் செயலாக்க முதன்முதலாகக் களமிறங்கியிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும்...
ஒரு வழியாக ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த, சமூக அக்கறை மிக்க ஒரு முன்னெடுப்பை இப்படி அரசியலாக்கி, இழுத்தடித்து ஊர் சிரிக்கும்படிச் செய்திருக்க அவசியமில்லை. ஆளுநர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று...
ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத். கலாக்ஷேத்ராவில் பணிபுரிந்தவர்கள் இவர்கள். பாலியல் அத்துமீறல், பாலியல் சீண்டல், பாலியல் பாகுபாடு, ஜாதிப் பாகுபாடு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது வைக்கிறார்கள் கலாக்ஷேத்ரா மாணவர்கள். இதில் ஹரி பத்மன் விசாரணைக்கு ஒத்துழைப்புக்...
செப்டம்பர் 2023-லிருந்து தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சில குடும்பத் தலைவிகளை தகுதியற்றவர்கள் என அரசு சொல்வதாக வார்த்தைகளைத் திரித்து மீம்கள் பரவத் தொடங்கி விட்டன. “மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும்...
தற்போது நடந்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டிய மாணவர்களின் வருகை குறைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2023-ம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. எட்டு லட்சத்து ஐம்பத்தோராயிரம் மாணவர்கள் தேர்வெழுத இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தமிழ்...
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா. அதைச் சுமார் நான்கரை மாதகாலம் அங்கீகாரமளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர், இப்போது திடீரென்று அந்தச் சட்டத்தை...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கடுமையாகத் தோற்றதற்கும் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மிக அதிக வாக்கு விதியாசத்தில் வெற்றி பெற்றதற்கும் பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். பணம் கொடுத்தார்கள்; பட்டியில் அடைத்தார்கள்; பிரியாணி போட்டார்கள் என்று சொல்லப்படும் காரணங்களை முழுமையாக...
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஒரு இராணுவ வீரர். அதேபகுதியைச் சேர்ந்தவர், திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமி. இருவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாகவே குடும்பப் பிரச்னை. அதனால் இரு குடும்பங்களுக்கிடையிலான உறவு சரியில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்...
2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதையெல்லாம் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குள் முடிவு செய்யும் என்றும்...