Home » துபாய்

Tag - துபாய்

உலகம்

அப்பன் சொத்தை அதிகரிக்கும் பிள்ளைகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திடீர் திடீரென்று ஏதாவதொரு சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பெரும்பாலும் புதுமையான திட்டமாக இருக்கும். இது பலகால வழக்கம். இப்போது சுற்றுலா மட்டுமல்ல; மக்கள் நெஞ்சைத் தொடும் விதமான வேறு பல நலத்திட்டங்களும் ஆண்டுக்கொன்றாவது அறிமுகமாகின்றன. அறிமுகமாவது பெரிதல்ல. அவை...

Read More
வாழ்க்கை

துபாய் முழுக்க ராஜுக்களும் லக்ஷ்மிகளும்

அமீரகத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாள்களை விநியோகிப்பதற்குப் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் வீட்டு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு, வாரத்திற்கு ஒரு முறை, அல்லது மாதம் முழுக்க என்று தேவைக்கு ஏற்றார் போல் அழைத்துக் கொள்ளலாம். இந்த நிறுவனங்களில் இந்தியா, நைஜீரியா, நேபாளம், பிலிபைன்...

Read More
கல்வி

கைல காசு,கிளாஸ்ல சீட்டு!

உலகத்தின் உயரமான புரூஜ் கலீபா, ஏழு நட்சத்திரம் உணவகமான புரூஜ் அல் அரப் என்று பிரமாண்டத்திற்குக் குறைவில்லாத துபாயில் அதிகமான கல்விக் கட்டணம் கொண்ட கல்வி நிறுவனம் தயாராகிக் கொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் ஜெம்ஸ் ரிசேர்ச் அண்ட இன்னோவேஷன் (GEMS RESEARCH AND INNOVATION)...

Read More
இயற்கை

புலம் பெயர் பறவைகள்

துபாயில் வசந்த காலம் வந்துவிட்டால் சுற்றுலாவாசிகள் மட்டுமில்லை வேற்று நிலப் பறவைகளும் சந்தோஷமாகிவிடும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் புலம் பெயர்ந்து துபாய் மட்டுமின்றி பக்கத்தில் இருக்கும் அபுதாபி, ராஸ் அல் கைமா போன்ற இடங்களுக்கு வருகின்றன...

Read More
திருவிழா

ஒரு ஊர்ல ஒரு உலகம்

ஐக்கிய அமீரகத்துக்கு நவம்பர் என்றால் வசந்த காலம். நான்கு , ஐந்து மாதங்கள் தொடரும் குளிர்காலத்தில் விடுமுறைகளும் திருவிழாக்களும் களைக்கட்டும். அதில் மிக முக்கியமானது குளோபல் வில்லேஜ் மேளா. குளோபல் வில்லேஜ் போகும் பார்வையாளர்களுக்கு உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்த பரவசம் கிடைத்துவிடும். ஒரே இடத்தில்...

Read More
உலகம்

மாற்றிக் காட்டிய எக்ஸ்போ

மாற்றுத்திறனாளிகளுக்கான  ‘அக்சஸ் எபிலிட்டிஸ் எக்ஸ்போவின் 2024’ (Access Abilities Expo 2024) கண்காட்சி துபாயில் நடந்து முடிந்துள்ளது. எந்த இடமாக இருந்தாலும், எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். அது சொகுசு அல்ல, அடிப்படை என்பதை துபாய் அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. தம் மக்களுக்காக சிறப்பான பல...

Read More
கல்வி

வெல்லும் கல்வி: துபாய் ஸ்டைல்

கல்வியில் சிறந்த முதல் பத்து நகரங்களுக்குள் இடம் பிடிக்க இலக்கை அறிவித்துள்ளது துபாய். மத்தியக் கிழக்கு நாடுகளில் எண்ணெய்க்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை. அது உண்மை. இருந்தாலும் துபாய், சுற்றுலா முதற்கொண்டு சுற்றுச்சூழல், வணிகம் போன்ற பல துறைகளில் உலகளாவிய அளவில் சிறந்து...

Read More
உலகம்

‘சரி. பிரிந்துவிடுவோம்!’

கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக் என்பது விவகாரம். அதை ஓர் இளவரசி செய்ததுதான் பரபரப்புக்குக் காரணமானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவராகவும் துபாயின் அரசராகவும் ஷேக் முஹம்மது...

Read More
பெண்கள்

லாரி ஓட்டும் காரிகை

“இஸ்லாமிய நாட்டில் பெண்கள் நிலை பரிதாபம். கறுப்பு அங்கி அவர்களை அடக்கி வைத்திருக்கிறது” என்று உச்சுக் கொட்டாதவர்கள்  அபூர்வம். ஆனால், துபாய் அரசர் ஷேக் முஹம்மது, “ஒரு பெண் இரவில் தனியாகச் சிறிதும் பயமின்றி நடந்து வருகிறாள் என்றால் அது ஐக்கிய அமீரக பூமியாகத்தான் இருக்கும்” என்று  பெருமையாகச்...

Read More
சமூகம்

கோடீஸ்வரர்களின் ஓட்டம்

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கும் பல காரணிகளுள் ஒன்று, அந்நாட்டில் உள்ள, உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை. எளிமையாகச் சொல்வதென்றால், சுமார் எட்டரைக் கோடி இந்திய ரூபாய் பெறுமதியுடைய சொத்துக்களைக் கொண்ட மில்லியனர்களின் எண்ணிக்கை. உலகளாவிய சமூக, அரசியல் மாற்றங்கள் மற்றும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!