நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம் நடந்திருப்பது அந்த அளவுக்குப் பிரபலமாகவில்லை என்றாலும் அவசியம் பொருட்படுத்தி கவனிக்க வேண்டியதே ஆகும். ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆமிர் கான்...
Tag - நம் குரல்
தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்துக்கு வருகிறார் எனில் நிகழ்ச்சி நிரலில் அவர் வெளிநடப்பு செய்வதும் உண்டென்பது சமீப கால வழக்கமாகியுள்ளது. ஒவ்வோராண்டும் நிகழும் இந்த வெளிநடப்புக்கு இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரும் விதிவிலக்கல்ல. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதும்...
பணத்தின் மதிப்பை அறிந்த ஒரே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவின் பிரதமராக இருந்தோரைப் பட்டியலிட்டால் நேருவுக்குப் பிறகு, நாம் இந்தியராகப் பெருமை கொள்ளத் தக்க பிரதமரும் இவரே. மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் இராஜ்யசபா உறுப்பினராகப் பதவியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார்...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளார் மு.க.ஸ்டாலின். தன்னுடைய பதிநான்கு வயதில் எழுத ஆரம்பித்தவர் கருணாநிதி. கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தவர். அவருடைய சட்டமன்ற உரைகள் மட்டுமே பன்னிரண்டு தொகுப்புகள். தன் வரலாற்று நூலான நெஞ்சுக்கு...
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தியாவும் இலங்கையும் பேசினால் மீனவர்கள் விவகாரம் தவிர்க்க முடியாத பேசுபொருள். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை அதிபரை வலியுறுத்தும்படி மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்...
அரவிந்த் பெனாகிரியா தலைமையிலான பதினாறாவது நிதி ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சரும் மாநில நிதியமைச்சரும் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். மாநில நலனுக்காக எழுப்பப்பட்ட அந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு செயல்படுத்துமா என்பதைப்...
ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்ததால் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விக்கிரவாண்டியும் கிருஷ்ணகிரியும் அதிகம்...
சென்னை நகரின் தீராப் பிரச்னைகளுள் முதன்மையானது, வடிகால் வழித் தடங்கள். மழைக்காலங்களில் பெரும்பாலான பகுதிகள் தாற்காலிக நீர்த்தேக்கங்களாகிவிடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாகச் சில பராமரிப்புப் பணிகளும் தற்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் சிக்கல் முழுமையாகச் சரியாக...
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மணிப்பூர்க் கலவரம் எவ்வளவு தீவிரம் அடைந்து, எந்தளவுக்கு மோசமான விளைவுகளைத் தந்ததோ, அதே அளவு பாதிப்பினை இப்போதும் ஏற்படுத்தககூடுமெனத் தெரிகிறது. மெய்தி இனத்தவருக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்குதல் தொடர்பாக அப்போது எழுந்த அதே பிரச்னைதான். அதே மெய்தி-குக்கி இன...
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், நாட்டின் கல்வித் துறையை இனி ஒன்றிய அரசு நிர்வகிக்காது; மாநிலங்களே அந்தப் பொறுப்பை முற்று முழுதாக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இனி அமெரிக்காவெங்கும் படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டம் முதல் தேர்வுகள் வரை அனைத்தையும்...