Home » நம் குரல் » Page 9

Tag - நம் குரல்

நம் குரல்

கடலோரக் கவலைகள்

சில நாள்களுக்கு முன்னர் சென்னை கடற்கரையை ஒட்டிய நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்த மீன் கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தினரால் அப்புறப்படுத்தப்பட்டன. வழக்கம் போல எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்தன. பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர். மேலோட்டமான பார்வையில் இது ஒரு சிறிய, எளிய சம்பவம்...

Read More
நம் குரல்

தவறுகளின் தொடக்கப் புள்ளி

தமிழர்கள் என்றில்லை. பொதுவாக மனிதர்கள் அனைவருமே மூன்று விஷயங்கள் சார்ந்து மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பார்கள். வேலை-வருமானம் முதலாவது. குடும்பம்-சுற்றம் அடுத்தது. மதம் உள்ளிட்ட சொந்த நம்பிக்கைகள், சார்புகள் மூன்றாவது. இந்த மூன்றில் எது ஒன்றின்மீது கல் விழுந்தாலும் உடனே பதற்றம் எழும்...

Read More
நம் குரல்

நமக்கு என்ன வேண்டும்?

ஊழலும் மதவாதமுமே ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் நமது அரசியல்வாதிகளின் பேசுபொருளாக இருக்கும். இரண்டும் முக்கியமான பிரச்னைகள் என்பதிலோ, இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவை என்பதிலோ நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவை இரண்டுமே இல்லாமல் போகும் நாள் கண்ணுக்கெட்டும் தொலைவில் இல்லை என்பதுதான் யதார்த்தம்...

Read More
நம் குரல்

ரம்மி அரசியல்

ஒரு வழியாக ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த, சமூக அக்கறை மிக்க ஒரு முன்னெடுப்பை இப்படி அரசியலாக்கி, இழுத்தடித்து ஊர் சிரிக்கும்படிச் செய்திருக்க அவசியமில்லை. ஆளுநர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று...

Read More
நம் குரல்

‘தஹி’க்கு இங்கே ‘நஹி’

‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை’ என்று மாவோ சொன்னதை நினைவூட்டி விட்டது மத்திய அரசு. நாம் அனைவரும் சாதாரணமாகப் பயன்படுத்தும் தயிர் விஷயத்தில் தனது முகமூடியைத் தானே விலக்கி, தனது உண்மையான முகம் இதுதான் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது...

Read More
நம் குரல்

ஆர்வத்தைத் தூண்டும் 2024 தேர்தல்!

எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள். – கவிக்கோ அப்துல் ரகுமான். ’பப்பு’ (சிறுவன்) என்று பாஜகவினரால் முன்பு கிண்டல் செய்யப்பட்ட ராகுல் காந்திதான் இன்று எல்லோராலும் பேசப்படும் அளவுக்கு...

Read More
நம் குரல்

டிஎம்எஸ்: ஒரே குரல்… எத்தனை அவதாரம்!

டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு, இந்த மார்ச் 24-ல் நூற்றாண்டு ஆரம்பம். சினிமாவில் இவர் பாடிய முதல் பாடல், ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி’.  1950-ஆம் ஆண்டு, ‘கிருஷ்ண விஜயம்’ என்னும்...

Read More
நம் குரல்

இணையவழிச் சூதாட்டம்… தடுக்க என்ன வழி?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா. அதைச் சுமார் நான்கரை மாதகாலம் அங்கீகாரமளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர், இப்போது திடீரென்று அந்தச் சட்டத்தை...

Read More
நம் குரல்

எடப்பாடி என்ன செய்ய வேண்டும்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  அதிமுக கடுமையாகத் தோற்றதற்கும் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மிக அதிக வாக்கு விதியாசத்தில் வெற்றி பெற்றதற்கும்  பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். பணம் கொடுத்தார்கள்; பட்டியில் அடைத்தார்கள்; பிரியாணி போட்டார்கள் என்று சொல்லப்படும் காரணங்களை முழுமையாக...

Read More
நம் குரல்

போராட்டத்தில் என்ன பாரபட்சம்?

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஒரு இராணுவ வீரர். அதேபகுதியைச் சேர்ந்தவர், திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமி. இருவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாகவே குடும்பப் பிரச்னை. அதனால் இரு குடும்பங்களுக்கிடையிலான உறவு சரியில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!