30. உளக் குவிப்பு முன்பொரு முறை அந்த பிராமண ரிஷி என்னிடம் சொன்னான், ‘சூத்திர முனியே, நீ ஒரு சராசரி மனிதன்தான். ஆனால் சராசரி மனிதர்களால் எட்ட இயலாத உளக் குவிப்பு உன்னிடம் இருக்கிறது. தருணத்தின் தேவைக்கேற்ப நீ உன் தேகத்தையும் சித்தத்தையும் ஒற்றைப் புலனாக்கிக்கொண்டுவிடுகிறாய். இது அபூர்வமானது.’ நானொரு...
Tag - நாவல்
29. தெய்வங்களின் உரையாடல் நான் கன்னுலா. கின்னர பூமியில் உள்ள முஞ்சவத்திலிருந்து புறப்பட்டு, ஆதிசிவக் குன்றில் சர்சுதி உற்பத்தியாகும் ஊற்றை அடைந்து, அங்கிருந்து நதியின் தடம் பிடித்து நடந்துகொண்டிருக்கும் சாரனின் இளைய சகோதரி. இவ்விதமாகத் தலையைச் சுற்றிச் சொன்னால்தான் சரித்திரத்துக்குப்...
124 குறியீடு அறிவுரை என்று எவர் சொல்வதையும் எடுத்துக்கொள்ளாதவன், பாண்டுரங்கன் சொல்படி டைப்ரைட்டர் முன்னால் உட்கார ஆரம்பித்தான். பின்னணி தெரியாததால் விஸ்வநாதன் நிர்மலா லதா கோஷ்டி, என்ன ஆகிற்று இவனுக்கு என்று மூக்கின்மேல் விரலை வைத்தது. ‘என்ன இவுரு பிராக்டீஸ் பண்றதைப் பாத்தா இந்தத் தடவை கண்டிப்பா...
28. பேசும் குருவி பல நாள்களாக நடந்துகொண்டிருந்தோம். கணக்கு வைத்துக்கொள்ளாமல் நெடுந்தொலைவைக் கடந்திருந்தோம். ஆனால் கவனப் பிசகாகக் கூட சர்சுதியின் கரையைவிட்டு விலகிச் செல்லவேயில்லை. ஆதிசிவக் குன்றிலிருந்து புறப்பட்டுத் தனியாக வந்தபோதுகூட சிறிது தடம் நகர்ந்து மீண்டும் வந்து சேர்ந்துகொள்வேன். வழியில்...
27. தொப்புள் கொடி முனி என்னைக் காட்டிலும் பிராயம் மிகுந்தவன். ஒரு தோராயக் கணக்கில்தான் சொல்கிறேன். எனக்கு முப்பது சம்வத்சரங்களுக்கு முன்னர் அவன் பிறந்திருக்க வேண்டும். ஆனால் தோற்றத்தில் இப்போதும் முப்பது பிராயத்து வாலிபனைப் போலத்தான் இருந்தான். அது பற்றி எனக்கு வியப்பெல்லாம் இல்லை. உடலத்தைப்...
26. எண்மர் கிராத குலத்து சார சஞ்சாரன் பைசாச மேருவுக்குச் சென்றதன் காரணத்தால் அவன் சூத்திர முனி குத்சனைச் சந்திக்க நேர்ந்து, அவனைக் குறித்து அறிந்து கொண்டான். இருபத்து மூன்று சம்வத்சரங்களாக அச்சாரனின் வரவின் பொருட்டுக் காத்திருந்த சூத்திர முனி குத்சன் தனது சரிதத்தை அவன் சிந்தைக்குள் செலுத்தி வைக்க...
25. சாபம் நான் குத்சன். எது ஒன்றையும் நானாவிதமாக எண்ணிப் பார்த்து முடிவு செய்யாமல் ஒரு சொல்லைக்கூட வீணடிக்கும் வழக்கம் எனக்கில்லை. சொல் அளவில் அத்தனை கவனம் காப்பவன் செயலளவில் எப்படி இருப்பேன்? அந்தக் கிராத குலத்து சாரசஞ்சாரன் என்னிடம் சொன்னான், ‘முனியே நீ சக்தி படைத்தவன். அதை உணர்கிறேன். முனியே உன்...
24. காட்சி ரூபம் ‘உன்னை நான் எதற்காக நம்ப வேண்டும்? ஏன் உன்னுடன் வர வேண்டும்?’ என்று இரண்டு காதங்கள் கடந்த பிறகு அந்த முனியிடம் கேட்டேன். அவன் வழக்கம் போலச் சிரித்துவிட்டு அமைதியாகவே இருந்தான். நடப்பதை நிறுத்திவிட்டுச் சொன்னேன், ‘எனக்கு இதற்கு நிச்சயமாக பதில் தெரிய வேண்டும்.’ இப்போது அவன் சொன்னான்...
23. கள்வன் சாரனின் சிந்தையில் சூத்திர முனி திருத்தியும் விரித்தும் எழுதிய அந்தச் சம்பவத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்துப் பார்த்தேன். நான் அதர்வன். எங்கிருந்தாலும் எந்தப் பணியில் இருந்தாலும் என் கவனத்தின் ஒரு பகுதி அவனது இருப்பிலும் செயல்பாட்டிலும்தான் மையம் கொண்டிருக்கும். ஒரு விதத்தில் அது...
22. விபூதி அனுபூதி என்று முதலில் நினைத்தேன். உட்செவியில் ஒலிக்கும் குரலைக்கூட அதனோடு தொடர்புறுத்தித்தான் ஏந்தி எடுத்துக்கொள்வேன். உணர்வின் அடியாழத்துக்கும் அப்பால் இருந்து ஓங்கி ஒலிக்கிற குரல். அது எனக்கு மட்டும் கேட்பது. இன்னொருவருக்கல்ல. வேறு யாருக்குமல்ல. மந்திரங்களாக இதுவரை கேட்டது, முதல் முறை...