13. அருளும் பொருளும் ஹேமந்த ருதுவின் முதல் சுக்ல பட்சம் தொடங்கியிருந்தது. காற்றே உறைந்துவிட்டாற்போல வெளியை துஷாரம் குவிந்து நிறைத்திருந்தது. தருக்களின் இலைகளிலும் கிளைக் கொம்புகளிலும் தடித்த தேகத்திலும்கூட வெண்படலம் மேவியிருந்தது. குருகுலத்தில் இருந்த பதினெட்டு பர்ணசாலைகளின் மேற்கூரைகளும்...
Tag - நாவல்
12. மின்மினி அவன் வயதைக் கணிக்க முடியவில்லை. ஒரு கணம் என் தகப்பனின் வயதுதான் இருக்கும் என்று தோன்றியது. உடனே அவன் இன்னும் மூத்தவனாக இருப்பான் என்றும் தோன்றியது. சட்டென்று இரண்டுமில்லை; அவன் வலு குன்றாத ஒரு வயோதிகன் மட்டுமே என்று நினைத்தேன். ஏழடி உயரம் இருந்தான். ஓடத்தின் துடுப்பை நிமிர்த்தி...
11. புருஷன் சர்சுதி ஒரு தெய்யம் என்று என் தகப்பன் சொன்னான். அந்த குருகுலத்துக்கு அருகே ஓடிய நதியின் கரைக்கு நான் சென்றதில்லை. நாம் அங்கே செல்லக்கூடாது என்று தகப்பனும் தாயும் திரும்பத் திரும்பச் சொல்லி வைத்திருந்தார்கள். தொடக்கத்தில் ஏன் கூடாது என்று ஒன்றிரண்டு முறை கேட்டுப் பார்த்தேன். அவர்கள்...
10. சொல்மாறாட்டம் நான் செய்வது தருமமில்லை என்பது நன்றாகத் தெரியும். இப்பாவச் செயலுக்காக நான் ஏந்திச் சுமக்கவேண்டிய கொடுந்துயரம் எதுவென்றும் அறிவேன். ஆயினும் இதனை நான் செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கு வேறு வழி தெரியவில்லை. மறையும் இறையும் மாளாதிருக்கும்வரை என் தரப்பின் நியாயம் ஒரு ஜீவ தாரிணியாக...
9. வான் கண்டேன் அவனது குகை சற்று விசித்திரமான அமைப்பினைக் கொண்டிருந்தது. பைசாசக் குன்றில் நான் ஏறி வந்த திக்குக்கு எதிர்ப்புற எல்லையில் அவன் என்னைச் சற்று தூரம் இறக்கி நடத்திச் சென்றான். நான் அவனிடம் வெளிப்படையாகக் கேட்டேன், ‘நீ என்னை எவ்வளவு நேரத்துக்கு உடன் வைத்திருப்பாய்? ஏனென்றால் இருட்டிய...
8. மாயமுனி ஒருசில விநாடிகள் மட்டுமே அவனைப் பார்த்தேன். அதுவும் பின்புறமாக. அதற்குள் அவன் மறைந்துவிட்டான். நினைவுகூர முயற்சி செய்தபோது என் வயதை நிகர்த்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று முதலில் தோன்றியது. உடனே அவன் ஒரு நூற்றுக் கிழவன் என்றும் தோன்றியது. அவனது தலைமுடி, பின்புறத் தொடைகளைத் தாண்டிக்...
121 டைப்பிங் அட்டன்டன்ஸ் ரெஜிஸ்டரில் இனிஷியல் போட்டுவிட்டு இருக்கைக்கு வந்து ஜோல்னா பையை நாற்காலியின் முதுகில் தொங்கவிட்டு அமர்ந்து, முழங்கை மடங்கலில் சுருக்கங்களுடன் இருந்த, பட்டையாக மடித்துவிட்டிருந்த குர்த்தா கைகளை சரிபண்ணிக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொண்டபோது ஹாலின் மறுகோடியில் இருந்த கூலருக்கு...
7. தடாகம் போர்க்களம் எனக்குத் தெரியும். யுத்தமென்றால் தெரியும். வெற்றியும் தோல்வியும் இரு தரப்புக் களமாடலின் தன்மை அடிப்படையில் ஏதோ ஒரு புள்ளியில் தீர்மானிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒன்பது நாழிகைகளில் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற ஒரு சூரபதியை நான் அதற்குமுன்...
6. நாக பந்தம் சிகரத்தை அடைந்தபோது முதலில் எழுந்த உணர்ச்சி, திகைப்புத்தான். மறுபுறம் என்ற ஒன்று இல்லாத மிகப்பரந்த சமவெளியாக அது இருந்தது. நாங்கள் வசிக்கும் கானகத்தின் அடர்த்தியினும் பல மடங்கு இதன் அடர்த்தி பெரிதாகவும் தோன்றியது. எங்கெங்கும் வானை அளாவிய குங்கிலிய மரங்கள் அரண் போலப் பரவிக் கிடந்தன...
5. கருஞ்சிவப்புக் கல் பைசாசக் குன்றின் அடிவாரத்தில் இருந்தேன். இந்தத் தொலைவை என்னால் தோராயமாகக் கூடக் கணக்கிட முடியவில்லை. நெடு நாள் – நெடுந்தொலைவு என்பதற்கு அப்பால் ஒன்றுமே தோன்றவில்லை. இந்நாள்களில் ஒன்றை மட்டும்தான் என்னால் சரியாகக் கவனிக்க முடிந்தது. சர்சுதியின் அடர்த்தி. உருத்திர மலையின்...