Home » நாவல் » Page 20

Tag - நாவல்

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 41

41.  பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின் வாயிற்காலில் சாய்ந்து நின்றிருந்தவனுக்கு உறைத்தது. கரும்பலகைக்கு முன்னால் இருந்த மேடைமேல் போடப்பட்டிருந்த மேஜை மீது கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொஞ்சம்...

Read More
பெண்கள்

எழுதிக் குவிக்கும் ராணிகள்

நூற்றுக் கணக்கான பெண் எழுத்தாளர்கள் எழுதிக்குவிக்கும் காலமாக இது இருக்கிறது. வாரப் பத்திரிகைகளும் சரி, சிற்றிதழ் வட்டமும் சரி. இவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. கிண்டல் செய்ய மட்டும் அவ்வப்போது மாத நாவல் எழுதும் பெண் எழுத்தாளர்களை இழுப்பார்கள். ஆனால் லட்சக் கணக்கான தமிழ் வாசகர்களின்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 40

40 பராக்கு ‘போனமா வந்தமானு இல்லாம போன வெடத்துல எல்லாம் என்ன பராக்கு வேண்டியிருக்கு’ என்று தாமதாமக வருகிற எல்லோருமே சின்ன வயதில் எதோ ஒரு சமயத்தில் திட்டுவாங்கியிருப்போம்  என்றால் இவன், எவ்வளவு அடி உதை பட்டாலும் பாராக்கு பார்ப்பதை வாழ்க்கையாகவே கொண்டிருந்தான். வளர்ந்து ஆளான பிறகும்கூட இது...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 39

39 ஒரு நிமிஷம் மெட்ராஸில் இருந்த அந்த சில நாட்களில், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து டிரைவ் இன் வந்து காலையில் பொங்கல் வடை தின்றதிலிருந்து அந்த நிமிஷம் வரை என்ன நடந்ததென்று எஸ்விஆர் வீட்டு மொட்டை மாடியில், அவருடன்  உலாத்தியபடி  ஆதியோடந்தமாய் சுவாரசியமாய் சொல்லிக்கொண்டிருந்தான். அவருக்கும் அது...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 38

38 காவியும் பாவியும் காலையில் சென்ட்ரலில் வந்து இறங்கியவனுக்கு, நம் இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பறப்பதுபோல குஷியாக இருந்தது. இருள் பிரியப்போவதற்கான அறிகுறிகள், இடப்பக்கம் கூடவே வந்துகொண்டிருந்த  வானத்தில் லேசாகத் தெரிய ஆரம்பித்திருந்தன. வானம் எப்படிக் கூட வரும். வருவதைப்போல இருப்பது தோற்ற...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபிஸ் – 37

37 எழுத்தும் வாழ்வும்  மறுநாள் மாலை ஆபீஸ் விட்டதும் அறைக்கு வராமல், வீட்டில் தங்கவைத்து, அறையும் பார்த்துக்கொடுத்த ஜீவாவைப் பார்க்க மரியாதை நிமித்தம் அவர் வீட்டிற்குப் போனான். வாசலிலேயே பெரியவர் அமர்ந்திருந்தார். பார்த்ததும் வழக்கம்போல நட்போடு சிரித்தார். ஆனால், முதல்முறை பார்த்தபோது இருந்ததுபோல...

Read More
ஆபீஸ் தொடரும் நாவல்

ஆபீஸ் – 35

35 இடம் ஏஓவின் கர்ர்ரில் அலறியடித்துகொண்டு அவன் ஓடிவந்ததைப் பார்த்து இளித்த டிஓஎஸ், தினந்தோறும் நடக்கிற இந்தக் கூத்திற்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும் என்பதைப்போல திரும்ப மேஜையில் கைகளை வைத்துக் கவிழ்ந்துகொண்டார். அடுத்து, இங்கிருந்து வரப்போகிற கொர்ர்ரை வேறு கேட்கவேண்டுமா என்பதைப் போல எழுந்து...

Read More
ஆபீஸ் தொடரும் நாவல்

ஆபீஸ் – 34

34 வம்பு வண்ணதாசன் பேச்சைக் கேட்டுத் திரும்பிவந்திருக்கக் கூடாதோ என்று தோன்றிற்று. போபோ போய் வேலையைப் பார் என்பதைப்போல விரட்டாதகுறையாய் அனுப்பிவைத்த ஏசி மீது எரிச்சலாய் வந்தது. இந்த ஆபீஸ் அந்த ஆபீஸ் அந்த ஏசி இந்த அதிகாரி என்று எவனும் வேறில்லை. எண்ணத்தில் செயல்பாட்டில் அதிகாரத்தில் எல்லாம் ஒன்றுதான்...

Read More
ஆபீஸ் தொடரும் நாவல்

ஆபீஸ் – 33

33 மண்ணும் மனிதர்களும் வாசலில் போய் நின்றதும் வாங்க வாங்க என்று வாய்நிறைய அழைத்தார் ஜீவா. அந்த நொடியே, எங்கோ முன்பின் தெரியாத இடத்திற்கு வந்திருக்கிறோமே என்று மனதில் இருந்த லேசான கிலேசமும் அகன்றுவிட்டது. படியேறி உள்ளே சென்றான். பெரியாரைப் போல தாடியுடன் கருப்புச்சட்டை அணிந்திருந்த பெரியவர் ஒருவர்...

Read More
ஆபீஸ் தொடரும் நாவல்

ஆபீஸ் – 32

32 கை வங்கிக்கு வந்து பார்த்தால் வண்ணதாசன் வீட்டுக்குப் போயிருந்தார். முகவரியை விசாரித்தபடியே அவர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தான். உள்ளே நுழைந்ததுமே சாப்பிட்டீங்களா என்று கேட்டவர், அவன் முகத்தில் இருந்த களைப்பையும் வியர்வையையும் பார்த்துவிட்டு சாப்பிடச்சொன்னார். அதன் பின்னர் ஹாலில் இருந்த சேர்களை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!