அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை ஏன் வேண்டும்? ஆரம்ப காலங்களில் குடியேற வந்த பலர் எண்ணியதுபோல அமெரிக்கச் சாலை வீதிகளில் தங்கம் கொட்டிக்கிடக்கவில்லை. மற்ற நாடுகள் போலவே இங்கேயும் வறுமையும் ஏற்றத்தாழ்வும் ஆங்காங்காங்கே நடக்கும் வன்முறைகளும் உண்டு. ஆனாலும் இங்கே பல குடிபெயர்ந்தவர்கள், தற்காலிக பணியிட...
Tag - புத்தகம்
நீரில் நடந்த பாமரன் ஆற்றங்கரையில் இருந்த பெரிய மரத்துக்கு அடியில் சூஃபி ஞானி ஒருவர் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். பல்வேறு ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த அவரது மனம், அறம் மற்றும் அறிவார்ந்த சிக்கல்கள் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தது. அப்போது அவரது சிந்தனையைக் கலைக்கும் விதமாகத்...
கெட்ட பையன் இப்படியே, வழக்கமான வாழ்க்கையோடு பத்து நாள் பறந்துபோனது. பள்ளியில் நடாஷாவுக்குச் சில தோழிகள் கிடைத்துவிட்டார்கள். அனுஷா, பூனேக்காரப் பொண்ணு. டிசரி, இலங்கை சிங்களப் பெண். கிரேஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். டாணா, செர்பியா நாட்டைச் சேர்ந்தவள் என்று ஒரு பட்டியலை பர்வீனிடம்...
சென்னை புத்தகத் திருவிழா. வாசிப்பின்வழி தம்மை ஆக்கிரமித்த எழுத்தாளர்களை ஒரு வாசகன் தேடிக் கண்டடைவதும், அவர்களை முதன்முதலில் கண்ட போது, அந்தக் கணம் மனதில் எழுகிற பரவச நிலையைச் சொல்லில் விவரிக்க முடியாது. அச்சிதழ்கள் மூலம் ஓர் எழுத்தாளனின் படைப்பை வாசித்து, கடிதங்கள் வாயிலாக அவர்களைத் தொடர்பு கொண்ட...
வரவிருக்கும் ஜனவரி 2023ல் சென்னைப் புத்தகக் காட்சி, சர்வதேசப் புத்தகக் காட்சியாக நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். சர்வதேசப் புத்தகக் காட்சி என்றால் என்ன..? அது எப்படியிருக்கும்..? இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஷார்ஜா புத்தகக் காட்சிக்கு ஒரு விசிட் அடித்துத் தெரிந்து கொள்ளலாம். ஷார்ஜா...
இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நெடிய வரலாறு கொண்டது. எனவேதான் இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. அந்தக் கடந்த காலப் போராட்டம் வருங்கால சந்ததியினருக்கு அரியதொரு வரலாற்று பொக்கிஷமாய் அமையும் என்பதில்...
யூ ட்யூபில் சினிமாவை விஞ்சும் வெற்றி என்றால் அது இன்றைக்கு சமையல் குறிப்பு சானல்களுக்குத்தான் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான புதிய சமையல் வீடியோக்கள். தெரிந்ததுதான், ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும் புதிய பதிப்புகளை ஆர்வம் குன்றாமல் மக்கள் பார்க்கிறார்கள். வீட்டு உணவு, வீதி உணவு...