26. ஃப்ரிட்ஜில் வைத்த உணவு அவனிடம் ஆரம்பித்து அறிவிடம் வந்து நின்றிருக்கிறோம். நல்லது. அற்புதங்களின் இயல்பு இதுதான். எதிர்பாராத தருணங்களில் தண்ணொளியாகத் தோன்றித் துலங்கும். ஒரு வசதிக்கு இதனை அணுவை நிகர்த்ததென்று வைத்துக்கொள்வோம். தேவைப்பட்டால் பிறகு உடைத்துக்கொள்ளலாம். இப்போதைக்கு தெளிந்த...
Tag - பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது. இரண்டுமே பட்டி தொட்டி எங்கும் ஹிட். வசூலும் அமோகம். பல தமிழ்த் திரைப்படச் சாதனைகளை முறியடித்துவிட்டது. அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான். இது பொன்னியின் செல்வன் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட...
நாவல் படித்து ரசித்த பலரும் ஒரு பிடி உப்புடன் தான் முதல்பாகத்தை அணுகினார்கள். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அத்தடைகள் குறைந்ததும் உண்மை. அதற்குப் பல காரணங்கள் – அதிகம் உறுத்தாத நடிகர் தேர்வு, கதையைத் தொடரப்போவதாகக் கட்டியம் கூறிய திரைக்கதை, இப்படி. ஆனால் இரண்டாம் பாகம் ஆரம்பம் –...
‘பொன்னியின் செல்வன்-1’ படத்தில் வரும் ‘தேவராளன்’ பாடலைக் கேட்டிருப்பீர்கள். எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே என்று ஒரு எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது அதைக் கேட்டதும். ‘பாலியில் நடக்கும் கெட்சாக் நடனத்தில் கேட்டதுதான் இது’ என்றோர் ஐயம் எழுந்தது. ஆனாலும் குழப்பம்தான். பின்னொரு நாளில் யூட்யூபில்...
பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு மக்கள்தொகையில் மிஞ்சிப் போனால் பத்திருபது சதவீதம் பேர்தான் படித்திருப்பார்கள். படிக்காதவர்கள்தான் பெரும்பான்மை. இப்படிப்பட்ட கதை படமாக்கப்படும்போது யாருக்காகப்...
ரசிகர்கள் படம் பார்ப்பது வேறு. சரித்திர வெறியர்கள் – சரித்திரம் இல்லாவிட்டாலும் பொன்னியின் செல்வன் வெறியர்கள் மணி ரத்னத்தின் படத்தை எப்படிப் பார்ப்பார்கள் என்று தெரியுமா? இந்தக் கட்டுரை ஒரு சாம்பிள். வணக்கம். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நலமாக இருக்கிறீர்களா? பொன்னியின் செல்வன்...
ஊரெங்கும் பொன்னியின் செல்வன் ஜுரம் பிடித்து ஆட்டுகிறது. நாவலைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் இன்று பொன்னியின் செல்வனைப் பற்றிப் பேசுகிறார்கள். எழுபதாண்டு காலத்துக்கும் மேலாக வாசித்து ரசிக்க இருந்த ஒரு படைப்பு இன்று கண்டு களிக்கவும் வந்துவிட்டது. சந்தேகமில்லாமல் இது ஒரு கொண்டாட்டத் தருணம்...
எதிலிருந்து தொடங்குகிறது சோழர்கள் சரித்திரம்? பழந்தமிழகத்தின் பொற்காலம் எது என்றால், பெரும்பாலும் அனைவரும் சொல்லும் பதில், சோழர்களின் காலம். இதிலும் மாமன்னன் இராசஇராசன் காலமும், அவரது மகன் இராசேந்தின் ஆட்சிக் காலமும். இதில் ஓரளவு உண்மையும் உள்ளது. தமிழகமும், இந்தியப் பகுதியின் ஐம்பத்தாறு...
புத்தக வாசிப்பு என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே மைனாரிடிகளின் செயல்பாடாக மட்டுமே இருந்து வருவது. தமிழில் பல்லாயிரக் கணக்கில் வாங்கப்பட்டது திருக்குறளாகவும் படிக்கப்பட்டது பொன்னியின் செல்வனாகவும் இருக்கும். அதுவுமே பல அல்லது சில லட்சக் கணக்காக ஒருவேளை இருந்துவிடுமோ என்பது நப்பாசைதான்...
பொன்னி நதி பாக்கணுமே… இன்று ஊர் முழுக்கப் பாடிக்கொண்டிருப்பது இதைத்தான். மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை; எழுதாத செய்தி இல்லை. சில நூறு பேர்கள் மட்டும் புழங்கும் இலக்கிய வட்டத்துக்குள் தெரிந்த பெயராக இருந்த இளங்கோ...