83 புத்தகம் போட்டுப் பார் கல்யாணம் பண்ணிப் பார்! வீட்டைக் கட்டிப் பார்! என்று அனுபவஸ்தர்கள் சிரித்துக்கொண்டே தீவிரமாகச் சொல்வதைப்போலப் புத்தகம் போட்டுப் பார்! என்பதற்கு அவனே உதாரணமாக ஆகப் போகிறான் என்பதை, ஆரம்பிக்கும்போது அவன் உணர்ந்திருக்கவில்லை. எல்லாவற்றையுமே கடந்துவந்தபின் எவருடையதோபோல்...
Tag - மாமல்லன்
அகஸ்டோ மாண்டெரோஸா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: Wilfrido H. Corral தமிழில்: ராஜலக்ஷ்மி சகோதரர் பார்தலோம் அரஸோலா, தான் வழிதவறிவிட்டதை உணர்ந்தபோது, தன்னை எதுவும் காப்பாற்றமுடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார். கௌதமாலாவின் சக்தி மிகுந்த காடு அவரைக் கருணையின்றி, மாற்றுதற்கிடமின்றி சிக்கவைத்துவிட்டது...
82 தெளிவு வருவதாய்ச் சொன்ன தேதிக்கு சரியாக ஒரு வாரம் தள்ளி வந்தான் சுகுமாரன். அவனைப் பார்த்ததுமே டபக்கென ஜோல்னா பையில் இருந்து வெளியில் குதித்தது நாற்காலிக் கதை. ‘ஹூம்’ என்று முறுவலித்தபடி, ‘கதையா’ என்றான். ‘நா வேற என்னத்தக் குடுக்கப்போறேன்.’ ‘உன்னைப்...
எழுத்தே தெரிந்திராத நான்கு வயதில் நான் பார்த்த முதல் புத்தகத்தின் பெயர்தான் மேலே இருப்பது. இதை எழுத்துக்கூட்டிப் படிக்கவே இன்னும் சில ஆண்டுகள் ஆகவேண்டியிருந்தது. அப்போதே அதற்கு நாற்பது ஐம்பது வயதாகியிருக்கும்படி அப்பாவின் ஒரே ஆஸ்தியாக இருந்த பழைய கனமான இரும்பு டிரங்குப் பெட்டிக்குள் பழுப்பேறிக்...
81 குழப்பம் நம்பியை நடுத்தெருவில் விட்டுவிட்டு வந்துவிட்டானே தவிர அவர் சொன்ன வார்த்தைகள் அவனை விடுவதாக இல்லை. ஒருவேளை அவர் சொல்வது உணமையோ. அந்தக் கதையைப் படித்திருக்காவிட்டால் நாம் இந்தக் கதையை எழுதியிருக்கதான் மாட்டோமோ. இல்லை. ஒரேயடியாய் அப்படிச் சொல்லிவிட முடியாது. அப்படிப் பார்க்கபோனால் நாம்...
ஜான் ஸ்டெய்ன்பெக் தமிழில்: தி.அ. ஶ்ரீனிவாஸன் புனைவு என்னும் புதிர் கட்டுரை: மாமல்லன் இளைஞனான டாக்டர் பிலிப்ஸ் சாக்குப் பையைத் தோளில் போட்டுக்கொண்டு கடலிலிருந்து திரும்பியபோது கிட்டத்தட்ட இருட்டியிருந்தது. பாறைகளின் மேல் தாவி ஏறிச்சென்று, தெருவில் இறங்கி ரப்பர் காலணி சாலையை உரசியபடி விரைந்தான்...
80 நிறையும் குறையும் எழுதியதைப் படிக்கப் படிக்க இனி கையே வைக்கவேண்டாம் என்கிற அளவுக்குத் திருப்தியாக இருந்தது. அப்படியே தூக்கி தூர வைத்துவிட்டான். இது ஆபத்து. எழுதியது நிறைவைத் தருவதைப்போல வேறு எதுவும் அவனுக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால், மகிழ்ச்சியில் துள்ளியபடி படித்தால்...
கேப்ரியேல் கார்சியா மார்கேஸ் ஆங்கிலத்தில்: J.S. Bernstein தமிழில்: தி. அ. ஶ்ரீனிவாசன் (அச்சுதன் அடுக்கா) புனைவு என்னும் புதிர் கட்டுரை: விமலாதித்த மாமல்லன் ஜோஸ் மாண்டியல் இறந்தபோது அவரது மனைவியைத் தவிர எல்லோரும் வஞ்சம் தீர்க்கப்பட்டதாக உணர்ந்தார்கள். ஆனால், அவர் உண்மையிலேயே இறந்துவிட்டார். என்று...
77 எதிர்கொள்ளல் எப்போதும்போல இரண்டாவது காட்சியாக எதோ ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்துவிட்டு ஜி என் செட்டி ரோடு திருப்பத்தில் ராஜா பாதர் தெருவில் இருக்கும் தள்ளுவண்டிக்கடையில் இரவு உணவாக முட்டைதோசைக்காகக் காத்திருந்தான். கொஞ்சம் தள்ளி சற்று முன் வழியில் வழிகேட்ட பையன் நின்றுகொண்டிருந்தான். அவனை...
75 இருக்கேன் பாவம். அகதிகள் எவ்வளவு பேர் வந்திருந்தாங்க? போய்ட்டு வந்தியே. எப்படி இருந்தது எக்ஸ்பீரியன்ஸ்? என்று ஆபீசிலும் டிரைவ் இன்னிலுமாக ஏகப்பட்ட விசாரிப்புகள். இன்னும் யாருமே வரவில்லை என்றதும் ஓரிருவரைத் தவிர அநேகமாக எல்லோருமே – வந்த முதல் அகதியே நீதான்னு சொன்னாரா நெடுமாறன் என்று...