74 வார்த்தைகள் மைசூர் வண்டியில் ஏறிக்கொண்ட பிறகு, இலங்கை அகதிகளுக்காகப் போட்ட லீவை என்னவாவது செய்து தீர்த்தாகவேண்டும் என்பதைத் தவிர மைசூருக்குப் போய்க்கொண்டு இருப்பதற்கு உருப்படியான ஒரு காரணத்தைச் சொல்லமுடியுமா என்று நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால், அவனுக்கு இப்படி இருப்பது பிடித்திருந்தது...
Tag - மாமல்லன்
73 கிளுகிளுப்பு ஏதோ ஒரு நினைப்பில் நம்பியிடம் சொல்லிவிட்டானே தவிர, பத்மா பெங்களூர் போகப்போவதாய் அவனிடம் சொன்னதுதான். அவள் போனாளா இல்லையா என்பதுகூட அவனுக்குத் தெரியாது. பெண்களைப் பற்றி எல்லோருக்கும் இருக்கிற கிளுகிளுப்புதான் அவனுக்கும் இருந்ததே தவிர, நம்பி சிரித்ததைப்போல பத்மாவை நன்கு தெரியும்...
72 அகதி இலங்கை அகதிகளுக்கு உதவப்போகிறேன் என்று கிளம்பிவிட்டானே தவிர ராமேஸ்வரம் என்கிற பெயருக்குமேல் அவனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பது அவனுக்கு மட்டுமேதெரிந்திருந்தது. அந்தப் பெயர்கூட, அம்மா அடிக்கடி, ‘கண்ணை மூடுவதற்குள் காசி ராமேஸ்வரம் போய்வந்துவிடவேண்டும்’ என்று...
71 பித்தம் ‘கொய்லோ கோழிமுட்டை!’ என்று கத்தியபடியே கட்டம் போட்ட சட்டையும் காக்கி பேண்டுமாக வினோதமாய் நடந்து வந்த உயரமான நடுத்தர வயதைக் கடந்த நரைத்த தலை ஆள் டிஓஎஸ் ஹனுமந்த ராவ் முன்னால் நின்று டேபிளின் மீது இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டபடி, ‘ஐ யாம் சிப்பாய் ராஜகோபால், ரிலீவ்டு...
70 சித்தம் அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே வராமல் இருந்த ஆங்கிலோ இந்திய ஏஓ ஓய்வுபெற, கணுக்காலுக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டுகிற பாய்மார்களைப்போல சேலையைக் கட்டியாகவேண்டிய அளவுக்கு உயரமாக இருந்த...
69 சந்தர்ப்பங்கள் ‘ஏய் என்னா மேன். எப்பப் பாத்தாலும் உனக்கு பொண்ணுங்களோட பேச்சு. சீட்ல உக்காந்து வேலைய பாரு. பொம்பள கிட்டப் பேசினா காது அறுந்துடும்னு உங்க அம்மா சொல்லலையா.’ என்று டிஓஎஸ் ரீட்டா மேடம் சொன்னதைக் கேட்டு ஹாலே சிரித்தது. அவன் பேசிக்கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா பெண்களும்...
68 ஈட்டி இல்லாததற்காக ஏங்குவதோ இழந்ததை எண்ணி அழுவதோ அவன் இயல்பிலேயே இல்லை என்றாலும் கையில் காசில்லாமல் போகும்போதெல்லாம் டிவி வாங்கித் தருகிறேன் என்று ஆயிரம் ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டு ஓடிய ரங்கன் துரைராஜ் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் வருத்தத்தைவிட கோபம்தான் பொங்கி...
67 உலகம் தெரியவில்லை சாரு நிவேதிதா என்கிற பெயரைக் கேட்டாலே நவீன இலக்கிய உலகில் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதும் அவனை இவனுக்குப் பிடித்துப்போக ஒரு காரணமாக இருந்திருக்கவேண்டும். இவனைவிடவும் குள்ளமாக – தனக்கு அடக்கமாக அமைவாக இருக்கவேண்டும் என்று எடை உயரம் என சகலத்தையும் பார்த்துப் பார்த்து...
66 தோற்றம் சும்மா பஸ்ஸில் போனால் போய்க்கொண்டே இருந்தது. எவ்வளவு பெரியது என்கிற பிரமிப்பை உண்டாக்கிற்று டெல்லி. அதை, அங்கேயே பல வருடங்களாய் வசிக்கிற வெங்கட் சாமிநாதன் தில்லி என்றும் ஊர்ப்பக்கமிருந்து போய் அந்த ஊர்க்காரனாகவே ஆகிவிட துடித்துக்கொண்டிருந்த சாரு நிவேதிதா டெல்லி என்றும் குறிப்பிட்டார்கள்...
65 நம்பிக்கை சற்று ஏமாற்றமாக இருந்தது. அடுத்த நாள் வருவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, வெங்கட் சாமிநாதன் அன்று வரவில்லை என்கிற செய்திதான் ரவீந்திரன் மூலமாக வந்துசேர்ந்தது. ரவீந்திரன் வேறு, ஃபில்ம் சொசைட்டிகளுக்கு சுற்றில் அனுப்புவதற்கான படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் தாம் இருப்பதாகவும்...