23 வாழ்வது எப்படி அம்மாவுடன் வாழ முடிந்தால், யாருடனும் வாழ்ந்துவிட முடியும் என்று சமயங்களில் தோன்றும். இத்தனைக்கும் பிறந்தது முதல் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவனாக அவன் இருந்தான். அம்மா வழி தாத்தா பாட்டியைப் பார்த்த நினைவே இல்லை. அவனுக்கு மூன்று வயதாகும்போதுதான் அவளுடைய அப்பா...
Tag - விமலாதித்த மாமல்லன்
22 கெளரவமாக வாழ்வது எப்படி? ஆபீஸ் கொஞ்சம் பழகிடுச்சி. ஆனாலும் என்னவோ மாதிரி இருக்கு. புதுசா என்ன ப்ராப்ளம். ஹி ஈஸ் ஓகே சார்னானே சுகவனம். ஏசி கடி சின்னச் சின்னதா இன்னும் இருந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனாலும் பெருசா இல்லே. ஆனா ஆபீஸுக்குப் போறதே கடியா இருக்கு. அதுக்கு யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது...
சாவி அவன் ரொம்ப மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் கேட்டுக் கொண்டான். எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிற வாய்ப்பு, சாவியில்லாமல் பூட்டு திறப்பது என்பதே ஒரு தனி கலைதான். ரொம்ப சுவாரஸ்யமான விஷயமும்கூட. ஹாஸ்டலில் தங்கிப் படித்தபோது நண்பர்களின் பெட்டியை இப்படியெல்லாம் திறந்தது. அப்புறம் எங்கே...
சாரதா பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் வராந்தாவில் உட்கார்த்தி வைத்திருந்தது. தாமிரவருணிக் கரை மேல் போகிற கொக்கிர குளம் ரோட்டையும், ரோட்டிற்குக் கீழே போகிற ஆற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சாரதா...
21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி? சதா நேரமும் இலக்கியம் ஆக்கிரமித்திருக்கிற தன்னை, கேவலம் ரங்கன் துரைராஜுக்குத் தின்னக் கொடுப்பதா. அவன் பின்னால் இனி திரிவதில்லை. அந்த சனியனை மண்டையிலிருந்து மொத்தமகத் தூக்கியெறிந்துவிடுவது என்று சங்கல்பம் செய்துகொண்டான். பணம் என்ன பெரிய பணம். பணத்தோடா பிறந்தோம்...
20. கைராசி ஏசிய பாத்துட்ட போல என்று கண் சிமிட்டியபடி சிரித்தான் சுகுமாரன். கம்மனாட்டி. லவ் டே க பால் என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டான். தப்பில்லப்பா வயசுலையும் சரி பதவிலையும் சரி நம்பளவிடப் பெரியவங்க கிட்டக் கொஞ்சம் விட்டுக் குடுத்துப் போறதுல நாம ஒண்ணியும் கொறஞ்சு போயிர மாட்டோம். என்ன சார்...
19 மானக்கேடு ரங்கனுக்கு ஒன்று அவன் அப்பன் துரைராஜுக்கு ஒன்று என – ஐசி பேப்பர்களை எழுதியபடியே – அவனையறியாமல் இடதுகையால் வறட்டு வறட்டென காலை சொறிந்துகொண்டதில், எப்போதும் வேர்வையாய்த் துளிர்க்கிற எக்ஸீமா ரத்தத்துளிகளாய் வெளிப்பட்டது. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் யானைக்கால் போல பாதம்...
18 புகை சைக்கிளில் இருந்து இறங்கும்போது, மொட்டை மாடியில் ஆண்ட்டனா இருக்கிறதா என்று அனிச்சையாகத் தலை அண்ணாந்தது. அதற்குள் எப்படி டிவி வந்திருக்கமுடியும் என்று அவனுக்கே அபத்தமாகப் படவே, ஆனாலும் தான் இவ்வளவு பரக்காவெட்டியாக இருக்கக்கூடாது என்று தோன்றியது. 0 வீட்டுக் கதவை வேகமாகத் தட்டினான்...
17 வீடும் பொருளும் டிவி வரப்போகிறது என்பதில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை. காரணமேயில்லாமல் ஆபீஸில் அங்குமிங்கும் போய்வந்துகொண்டு இருந்தான். சாவித்ரி மேடம் முதல் சிப்பாய் பாபு வரை, செக்ஷனில் இருந்த அத்தனைப்பேரும் என்ன விஷயம் என்று கேட்குமளவிற்கு பரபரப்பாக இருந்தான். யாரிடமும் பிடிகொடுத்துப்...
16 அறையும் வீடும் மாலையில் ஆபீஸ் விட்டதும், அத்தனை டிராபிக்கிலும் பறக்காத குறையாக டிரைவ் இன்னை பார்க்கப் பாய்ந்தது அவனுடைய சைக்கிள். சைக்கிளைப் பூட்டியபடியே உள்ளே பார்த்தான். ரங்கன் துரைராஜ் அவனைப் பார்த்துக் கையைத் தூக்கிக் காட்டினார். எப்போதும் போல அவர் அருகில் அமர்ந்து, அவ்வளவு கும்பலிலும்...