கடந்த நவம்பர் மாதம் உலகக்கோப்பைக் கிரிக்கெட் காய்ச்சல் நாடு முழுவதும் உச்சத்தில் இருந்தது. இறுதிப்போட்டியில் இந்தியா பங்கேற்பது உறுதியானதும் எதிர்பார்ப்புக்கள் ஏகத்துக்கும் எகிறிக் கிடக்க, இறுதி போட்டி நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, உத்தர்காண்ட் மாநிலத்தில், உத்தரகாசி மாவட்டத்தில், 41சுரங்கத் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பமும் வாழ்வா, சாவா என்ற மரணப்போராட்டத்தில் இருந்தனர்.
ஏதாவது அதிசயம் நிகழாதா..? 41 பேரையும் உயிருடன் மீட்க முடியாதா..?என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், பிரார்த்தனையாகவும் இருந்தது.ஒட்டு மொத்த இந்தியாவும்,ஏன் உலகமே உற்றுநோக்கிய அந்த நிகழ்வில் இறுதியாக வெற்ற கிடைத்துவிட்டாலும், அந்த வெற்றிக்கு பின்னால் நடந்த சம்பவங்களும்,அந்த வெற்றிக்குக் கொடுக்கப்பட்டஉழைப்பும், ஒரு குழுவாக அனைவரும் இணைந்து செயல்பட்ட தருணங்களும், ஒரு பரபரப்பான கிரிக்கெட் மேட்சின் இறுதி ஆட்டத்தினை மிஞ்சும் சிறப்புமிக்கவை. கிரிக்கெட்ஆட்டத்தில் வெற்றிக்கான அறிகுறி இன்றி தோல்விமுகமாக இருக்கும்போது, இடையில் ஒரு வீரர் ஆபந்த்பாந்தவனாக வந்து,அதிரடிகள் செய்து, ஆட்டப்போக்கினையே மாற்றி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதுபோல, தமிழ்நாடு, நாமக்கல், திருச்செங்கோட்டினை சேர்ந்த ஒரு நிறுவனமும்,அதன் ஊழியர்களும் சுரங்கத் தொழிலாளர்களின் மீட்புப் பணியில் செய்த சேவைகள் இன்று இந்தியஅளவில் கவனம் பெற்றுள்ளது.
Add Comment