மூழ்கியவர்கள்
அடுத்த ஏழு மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் அமைதியைக் குலைக்கப்போகும் நாளது. 2009ஆம் ஆண்டு, மே மாத இறுதி. அன்று ஷோபியன் மாவட்டத்திலுள்ள பொங்கம் கிராமத்தில் கலவரம் வெடித்தது. கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை இராணுவத்தினர் வன்புணர்ந்து கொன்றுவிட்டார்களாம். செய்தி கதிர்வீச்சாய்ப் பரவியது.
அந்தப் பெண்களின் பிணங்கள் ஓர் ஓடையில் கிடந்தன. அவர்கள் இருபத்திரண்டு வயதான நிலோஃபரும் பதினேழு வயதான ஆசியாவும். அப்பெண்கள் ஓடையில் தவறிவிழுந்து இறந்ததாகக் காவல்துறை நம்பியது. ஆனால், மக்கள் இராணுவத்தினர்தான் இதைச்செய்திருக்க வேண்டுமென எண்ணினார்கள். சடலங்களின் பிரேதப்பரிசோதனை முடிவுகள் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
இரு பெண்களும் வன்புணர்ந்து கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றது போஸ்ட்-மார்ட்டம் அறிக்கை. மாநிலம் கலவரபூமியானது. காந்தும் கனலில் கந்தகம் வார்த்துக் களித்தனர் பிரிவினைவாதத் தலைவர்கள். பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கங்கள் ஆங்காங்கே ஒலித்தன. வழக்கை மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தது மாநில அரசு.
Add Comment