Home » உதவாத கல்வி முறையிலிருந்து ஒரு யு டர்ன்
கல்வி

உதவாத கல்வி முறையிலிருந்து ஒரு யு டர்ன்

Oplus_131072

நமது கல்வி முறையால் நம்மில் எத்தனை பேர் விரக்தியடைந்திருப்போம்? அதைவிட முக்கியமாக, எத்தனை முறை அதைச் சரி செய்ய முயன்றிருப்போம்? புனேவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்களின் கோபத்தை ஆக்கப்பூர்வமாக வெளிக்காட்ட நினைத்தார்கள். கல்வித் திட்டத்தில் தாங்கள் கொண்டுவர விரும்பிய மாற்றத்தை மற்றவர்களுக்குக் கிடைக்கச் செய்தார்கள். விளைவு, திங்க்ஸ்கூல்.

திங்க்ஸ்கூல், 2019 இல் மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆளுமை மற்றும் தொடர்புத் திறனைக் கற்பிக்கும் மையமாகத் தொடங்கப்பட்டது. இன்றைக்கு யு டியூபில் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களோடு வளர்ந்து வருகிறது. மாணவர்களுக்கான இணைய வகுப்புகள், சர்வதேச அரசியல் காணொளிகள், நிதியியல் சார்ந்த கள ஆய்வு காணொளிகள் மற்றும் முக்கிய ஆளுமைகளுடன் நேர்காணல்கள் எனப் பலதரப்பட்ட தளத்தில் இயங்கி வருகிறார்கள்.

பார்ஷ் கோதாரி மற்றும் கணேஷ் பிரசாத் இருவரும் புனேவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள். அவர்கள் பள்ளி- கல்லூரிக் காலங்களில் இருந்த பாடத்திட்டமும், ஆசிரியர்களின் அணுகுமுறையும் தங்களைப் பாதித்ததின் விளைவே திங்க்ஸ்கூல் தொடங்குவதற்கு முக்கிய காரணம் என்கின்றனர்.

‘ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த அதே கல்வித் திட்டம் இன்றும் இருக்கிறது, காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் எதுவுமில்லாமல், அதைப் படித்து வரும் மாணவர்கள் இன்றைய நிஜத்தை எதிர்கொள்வதற்கு அஞ்சுகிறார்கள். எங்களின் நோக்கமே இந்தியக் கல்வி முறையில் ஓர் அழியாத தாக்கத்தை உண்டாக்குவது தான். உலகத் தரத்திலான கல்வியை நம்மவர்களுக்குக் கிடைக்கச் செய்யவேண்டும். அதுவும் ஒரு ஜோடி ஜீன்ஸ் பேண்ட் வாங்கும் விலையில்.’ என்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!