தாய்மொழி, ஆங்கிலத்துடன் மூன்றாவதாக ஓர் இந்திய மொழியையும் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதுதான் மும்மொழிக் கொள்கை. அது எப்போதும் போலத் தற்போதும் விவாதத்துக்குரிய விஷயமாகியிருக்கிறது.
‘ஏன் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறீர்கள்? குழந்தைகள் மொழிகளை எளிதாகக் கற்றுக் கொள்வர். மூன்று மொழிகள் தெரிந்திருப்பது அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவும். இருந்தும் ஏன் இருமொழிக் கொள்கையில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்?”
‘எல்லாக் குழந்தைகளும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் எனும் அற்புதமான திட்டம் உங்களிடம் இருக்கிறது. ஏற்கனவே அது நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலங்களில், கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது? உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் இருக்கும் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? மூன்றை விடுவோம், எத்தனை குழந்தைகளுக்கு இரண்டு மொழிகள் தெரியும்? இருமொழிக் கொள்கையைப் பின்பற்றிக் கல்வித்துறையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை, மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றும் எந்த மாநிலமாவது சாதித்துள்ளதா? இருந்தால் தரவுகளோடு வாருங்கள். மும்மொழிக் கொள்கையைப் பற்றி அப்போது பேசுவோம்.’
ஊடகவியலாளர் கரண் தாப்பரின் கேள்விக்கு, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த இந்தப் பதிலை, சமூக ஊடகத்தில் பகிர்ந்து பாராட்டியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
Detailed analysis, Final para informative one.