Home » டிக் டாக் : ஆறுதலும் அபாயமும்
அறிவியல்-தொழில்நுட்பம்

டிக் டாக் : ஆறுதலும் அபாயமும்

அமெரிக்காவில் இருக்கும் கோடிக்கணக்கான பதின் பருவத்தினருக்குத் தற்போதைய மிகப் பெரிய கவலை, 19 ஜனவரி 2025 அன்று வரவிருக்கும் ‘டிக் டாக்’ செயலிக்கான தடை. இந்தியாவில் திறன்பேசி வைத்திருக்கும் முக்கால்வாசி நபர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களைச் செலவழிக்கும் யூ-ட்யூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) செயலியின் முன்னோடி ‘டிக் டாக்’. 2020இல் சீனாவுடன் ஏற்பட்ட உரசலுக்குப் பின்னர் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுவிட்டது. அப்படியென்ன தான் இருக்கிறது இந்த ‘டிக் டாக்’கில்? ஏன் அமெரிக்க வல்லரசே அதைப் பார்த்து அஞ்சுகிறது? அதன் கதை என்ன?

சீனாவின் ‘நங்காய்’ பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு கணினிப் பொறியியலை முடித்தார் “ஷாங் யிமிங்” (Zhang Yiming). இவரின் தாயும் தந்தையும் சீன அரசாங்க ஊழியர்கள். அவர்களது ஒரே மகன் ஷாங். “முதல் பார்வையிலேயே எல்லோரையும் ஆச்சரியப்படுத்துதல்” என்கிற சீன பழமொழியிலிருந்து வந்தது அவரின் பெயர். அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் சீனாவின் மிகப் பெரிய செல்வந்தர் என்கிற நிலைக்கு வந்துள்ள ஷாங்குங்குப் பொருத்தமாக இருக்கிறது அந்தப் பெயர்.

பல்கலைக் கழகத்தில் தன்னோடு படித்த மாணவியைக் காதலித்து மணமுடித்தார் ஷாங். ‘குக்சும்’ என்கிற சீனப் பயண இணையத்தளத்தில் அவர்களது முதல் பொறியாளராகச் சேர்ந்தார். அடுத்த இரண்டே ஆண்டுகளில், அதாவது 2008இல் ‘மைக்ரோசாப்ட் சீனா’வில் வேலைக்குச் சேர்ந்தார், அங்கேயிருந்த கட்டுப்பாடுகள் சில மாதங்களிலேயே பிடிக்காமல் போயின. சொந்தமாகத் தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்து ‘குக்சும்’ நிறுவனம் தனியாகக் கழட்டிவிட்ட வீட்டு மனைகள் இணையத்தளத்தை வாங்கி அதை நடத்தத் தொடங்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!