நவநாகரிகத்தின் தலைவி
ஷனெல் (Chanel) எனும் பெயர் உலகெங்கும் பிரபலமானது. ஆடம்பரமான பொருட்களை, முக்கியமாகப் பெண்கள் மத்தியில், விற்பனை செய்யும் பிராண்ட். இன்றைய நவநாகரிகத்தின் அடையாளங்களில் ஒன்று என்று சொல்லலாம்.
இது 1910-ம் ஆண்டு பிரெஞ்சு ஃபாஷன் டிசைனரான (Fashion designer) கோகோ ஷனெல் எனப்படும் பெண்ணினால் தொப்பிகள் விற்கும் ஒரு கடையாகப் பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது உலகெங்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகளும், இருபத்தியெட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டு இயங்குகிறது. இதன் தற்போதைய தலைமைச் செயலகம் லண்டன் மாநகரில் உள்ளது. இதன் வருடாந்த விற்பனையின் பெறுமதி பதினைந்து பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலானதாகும்.
Add Comment