கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து நிமிடத்தில் கல்வெட்டு வெறுங்கல்லானது. அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தார்கள். இரண்டாம் உலகப் போரில் சோவியத்தின் வெற்றியைப் பறைசாற்றும் நினைவுச்சின்னம் அது. உண்மையில் அவர்கள் நகராட்சி ஊழியர்கள் அல்ல. உக்ரைன் கலாசார ஆர்வலர்கள்.
சோவியத் ரஷ்யா சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும், உக்ரைனின் இண்டு இடுக்குகளில் இருந்து களைந்துவிட வேண்டும். இதுதான் டீரஸ்ஸிஃபிகேஷன். வரலாறு, மொழி, கலாசாரம் என்று சகலத்திலும் பரவியுள்ள ரஷ்ய அடையாளங்களை, வேரோடு பிடுங்கியெறியத் தொடங்கிவிட்டது உக்ரைன். தனது நாயகர்களை மேடையேற்றி வணக்கம் செலுத்துகிறது.
Add Comment