காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் நூற்றாண்டு காலப் பிணக்குக்குத் தீர்வு காண, உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு முக்கியமான ஆணையைப் பிறப்பித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுலை நடுவராக நியமித்து, இந்தப் பிரச்சினைக்கு ஒரு சுமுகத் தீர்வு காண நீதிமன்றம் முயல்கிறது.
உண்மையில், திவ்யப் பிரபந்தம் ஓதுவதில் இங்கே இருதரப்பினருக்கும் இடையே எவ்வித முரண்பாடும் இல்லை; அது பாடப்பட வேண்டியதன் அவசியத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். ‘எதைப் பாடுவது’ என்பதில் நிலவும் தத்துவ முரண்களே இன்று உச்சநீதிமன்றத்தின் வாசலைத் தட்ட வைத்துள்ளது.
இந்தப் பிணக்கு இன்றோ நேற்றோ தோன்றியதல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இதன் ஆணிவேர், ராமானுஜருக்குப் பிறகான வைணவ மரபின் வளர்ச்சியில் இருக்கிறது. ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் ‘எல்லாரும் எம்பெருமான் அடியார்களே’ என்ற சமத்துவமே மேலோங்கியிருந்தது. அவருக்குப் பிறகு தத்துவ விளக்கங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் ஏற்பட்ட நுணுக்கமான மாற்றங்களே ஆச்சாரியப் பரம்பரைகள் வழியாகத் தனித்தனி மரபுகளாகக் கிளைத்தன. இந்தக் கிளைகள்தான் இன்று வடகலை என்றும், தென்கலை என்றும் அறியப்படுகின்றன.















Add Comment