இன்றைய பல நாடுகள் செவ்வாய்க்கும் நிலவுக்கும் கோள் அனுப்பி ஆராய்வதெல்லாம் அங்கு நீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதைக் கண்டறியத்தான். இந்த பூமிப் பந்திலும் நடக்கப் போகும் அடுத்த பெரும் சண்டை நீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஏனெனில் இந்த பூமியின் எந்த உயிரும் நிலை பெற்று வாழ்வதற்கும், மலர்வதற்கும் நீர் அவசியம் என்பதே காரணம். பூமிப்பந்தின் பெருகிக் கொண்டேயிருக்கும் மக்கள்தொகை மற்றும் விலங்குகளின் பெருக்கத்தால் இருக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. பூமிப்பந்தின் முக்கால் பங்கிற்கும் மேல், அதாவது 75 சதவீதத்துக்கும் அதிகம் நீரால் ஆனதுதான்; ஆனால் இந்த நீரில் மனிதரும் மற்றையவரும் பயன்படுத்தத் தக்க நீரானது அம்மொத்த நீரில் 2.5 சதவீதம் மட்டுமே என்று அறிந்தால் நாம் வியப்படைவதோடு, அச்சமும் அடைய வேண்டும். மீதமுள்ள 97.5 சதவீதம் உப்பு நீர்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment