ரஷ்யா உக்ரைன் மீது போர் அறிவிப்பு செய்த போது, உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களின் மீட்பு குறித்த செய்திகள் அதிகம் வெளிவரலாயின. இந்திய ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக அமைந்த இந்த மீட்பு நடவடிக்கைகளின்போது சில கேள்விகள் நம் மனத்தில் தோன்றின. இவ்வளவு இந்திய மாணவர்கள் உக்ரைனுக்குப் போய் ஏன் படிக்க வேண்டும்? அதிலும் குறிப்பாக மருத்துவம் படிக்க ஏன் போகிறார்கள்? இந்தியாவில் இல்லாத மருத்துவக் கல்லூரிகளா? இந்தியாவில் இல்லாத வசதிகளா? போர்ச் சூழலில் சிக்கிக் கொண்ட நிறைய தமிழக மாணவர்கள் கூட செய்திகளில் பேசுவதைப் பார்த்தோம். வெளிநாட்டில் உயர்கல்வி என்றாலே அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குத் தான் போவார்கள். உக்ரைன், ஜார்ஜியா, ரஷ்யா, போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் போய் ஏன் மருத்துவம் படிக்க வேண்டும்? இவ்வளவு மாணவர்களைக் கிழக்கு ஐரோப்பா எப்படி ஈர்க்கிறது?
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Comment
-
Share This!
Add Comment