பிரித்தானியர்கள் 18-ம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், 1795-ம் ஆண்டளவில் இலங்கையின் அனேகமான பகுதிகளைக் கைப்பற்றி விட்டனர். இருப்பினும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்தது. கண்டி அவர்கள் வசம் வந்ததன் பிறகு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற இடம் அது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் மனித நடமாட்டம் அற்ற, காடுகள் அடர்ந்த அந்த நெருங்கிய வனப் பிரதேசத்தில், மலைகள் நிறைந்த அந்தப் பகுதியில் மலைகளைக் குடைந்து பாதைகளை உருவாக்குவது என்பது அத்தனை இலகுவான காரியமாக இருக்கவில்லை.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Add Comment