Home » Editorial Policy

Editorial Policy

1. மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் வெளியாகும் சிறுகதைகள், குறுங்கதைகள், நாவல்கள், கதைத் தொடர்கள் அனைத்தும் புனைவு என்னும் வகைமையைச் சார்ந்தவை. அவை கற்பனையில் சித்திரிக்கப்படுபவை மட்டுமே. எதையும் யாரையும் குறிப்பிடுவன அல்ல. கதைகளில் இடம்பெறும் பெயர்கள் இருப்பவர்கள், மறைந்தவர்கள் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பவங்கள் நிஜம் போலத் தோன்றினால் புனைவின் தற்செயல் சாயலாக இருக்கலாமேயன்றி உண்மை என்று கருத எந்த முகாந்திரமும் இல்லை.

2. மெட்ராஸ் பேப்பரில் வெளியாகும் கட்டுரைகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து, உறுதி செய்துகொண்ட பின்பே பிரசுரிக்கிறோம். எங்கள் கவனத்தை மீறி எங்கேனும் தகவல் பிழை ஏற்பட்டு, சுட்டிக் காட்டப்படுமானால் அவை உடனுக்குடன் சரி செய்யப்படும்.

3. மெட்ராஸ் பேப்பரில் எழுதுபவர்கள், செய்தியாளர்கள் தத்தமது சொந்த வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பிற பத்திரிகைகளிலும் எழுதுவது அவரவர் விருப்பம். அவர்களது சொந்தக் கருத்துகளுக்கு மெட்ராஸ் பேப்பர் பொறுப்பேற்காது. மெட்ராஸ் பேப்பரில் இடம்பெறும் கட்டுரைகளுக்கும் அவற்றின் நம்பகத்தன்மை, தரம், தொனி, நடுநிலைமை ஆகியவற்றுக்கும் மட்டுமே மெட்ராஸ் பேப்பர் பொறுப்பாகும்.

4. மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகளுடன் இணைத்துப் பிரசுரிக்கப்படும் புகைப்படங்கள் எமது செய்தியாளர்களால் எடுத்து அனுப்பப்படுபவை. அல்லது காப்புரிமை கோராத, Free Stock Photos சேவை தரும் தளங்களில் இருந்து பெறப்படுபவை. காப்புரிமை காலாவதியான புகைப்படங்களையும் பயன்படுத்துகிறோம்.

5. மெட்ராஸ் பேப்பரில் இடம்பெறும் புகைப்படங்கள் கறுப்பு வெள்ளையில் மட்டுமே வெளியாகும். படங்கள் வாசிப்புக்கு இடைஞ்சலாக இல்லாதிருக்க இந்த ஏற்பாடு. வண்ணப் படங்கள் அவசியம் என்று கட்டாயப்படுத்தும் கட்டுரைகளில் மட்டும் அவை தேவைக்கேற்பப் பயன்படுத்தப்படும்.

6. மெட்ராஸ் பேப்பருக்குக் கதைகள், கட்டுரைகள் அனுப்ப விரும்புவோர் யுனிகோட் எழுத்துருவில் அனுப்புக. உங்கள் படைப்பு பிரசுரத்துக்குத் தேர்வானால் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். ஒரே படைப்பைப் பல்வேறு இதழ்களுக்கு ஒரே சமயத்தில் அனுப்புவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டுகிறோம். குறைந்த பட்சம், பிற இதழ்களுக்கு அனுப்பியிருக்கும் படைப்புகளை மெட்ராஸ் பேப்பருக்கு அனுப்ப வேண்டாம்.

7. கதைகள், கட்டுரைகள் எதுவானாலும் பிரசுரிக்கத் தேர்வு செய்யவும் நிராகரிக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு. படைப்புகளில் தேவைப்படும் திருத்தங்களைச் செய்துகொள்ளவும் ஆசிரியருக்கு முழுச் சுதந்திரம் உண்டு. இவற்றுக்கு உடன்படுவோர் மட்டும் படைப்புகளை அனுப்பலாம்.

8. மெட்ராஸ் பேப்பரில் வெளியாகும் உங்கள் கதைகள், கட்டுரைகளைப் பிற்பாடு நீங்கள் புத்தக வடிவிலோ, மின்நூல் வடிவிலோ வெளியிட்டுக்கொள்வதில் மெட்ராஸ் பேப்பர் தலையிடாது. எழுத்தாளர்களின் காப்புரிமையை நாங்கள் மதிக்கிறோம்.

9. உங்கள் படைப்புகளை editor@madraspaper.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

10. மெட்ராஸ் பேப்பர் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளைப் பிரதியெடுக்கவும் (copying), திரைச் சொட்டு (Screen Shots) எடுக்கவும், இணையத்தில் பிற இடங்களில் பகிரவும் (Sharing full articles), வாட்சப் போன்ற செயலிகள் வழியே சுற்ற விடுவதும் தடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் பிரசுரமாகும் படைப்பினை வேறொரு ஊடகத்தில் / சமூக ஊடகங்களில் வெளியிடவேண்டுமென்றால், கட்டாயம் ஆசிரியரின் அனுமதியைப் பெற வேண்டும்.

படைப்புகளின் சுட்டிகளைப் (links) பகிர்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்கு அனுமதி கோரத் தேவையில்லை.

 

 

error: Content is protected !!