Home » நீ வேறு, நான் வேறு – 32
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 32

32. கொலை வெறித் தாண்டவம்

1958 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி பாகிஸ்தான் அதிபர் இஸ்கந்தர் மிஸ்ரா, நாடு முழுவதையும் ராணுவச் சட்டத்துக்கு உட்படுத்துவதாக அறிவித்தார். அதாவது அரசியல் அமைப்புச் சட்டம் மூட்டை கட்டி வைக்கப்படும். மாநில சட்ட மன்றங்கள் கலைக்கப்படும். இஷ்டப்படி எந்தக் கட்சியையும் தடை செய்யலாம். யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். விசாரணையே இல்லாமல் எத்தனை நாள் வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம். ஊர்வலம், பேரணி என்றெல்லாம் பேச அல்ல; நினைக்கக்கூடக் கூடாது. நாளிதழ்கள், வானொலி அனைத்தும் என்ன எழுத வேண்டும், என்ன பேசவேண்டும் என்பதை அதிபர் அலுவலகத்து செகரட்டரி எழுதி அனுப்புவார். அதைப் பார்த்துப் படித்தால் போதும். பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டது. நாடெங்கும் ஏராளமான தனியார் நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. எல்லாம் ஒரே நாளில் காட்சி மாற்றம் கண்டுவிட்டது.

இதில் உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால், இப்போது இந்த திடீர் ராணுவச் சட்டத் திணிப்புக்கு என்ன காரணம் என்று பலூசிஸ்தான் நீங்கலான பாகிஸ்தானின் பிற மாநில மக்களுக்குத் தெரிய வரவேயில்லை. ஏனெனில், பலூசிஸ்தானில் அப்போது என்ன நடந்தது என்ற விவரம் முற்றிலுமாகப் பாகிஸ்தானின் பிற பகுதி மக்களுக்கு மறைக்கப்பட்டது. இம்மாபெரும் திருப்பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தவர், அன்றைய பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் அயூப் கான்.

மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்க என்ன செய்யலாம் என்று கலாட் மன்னர் யோசித்துக்கொண்டிருந்தார் அல்லவா? அவர் கண்டறிந்த வழி, பழங்குடியின மக்கள் புரட்சி!

வினோதமாக உள்ளதல்லவா? ஆனால் அது நடந்தது. ஒரு மன்னரின் தலைமையில் மக்கள் புரட்சி. இது அவரது தம்பிக்குத் தோன்றாத யோசனை. பலூசிஸ்தானின் இதர எந்த அரசியல் தலைவரும் எண்ணிப் பார்த்திராதது. உண்மையில் மன்னர் மிர் அஹ்மத்யார் கானுக்கு அதில் பெரிய அரசியல் நோக்கங்கள் இல்லை. உண்மையிலேயே இல்லை. அப்படி ஒரு நோக்கம் இருக்குமானாலும் அது நடைமுறையில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது அவருக்குத் தெரியும். ஒரு மன்னராக இருந்தவர், அப்போதும் மக்கள் மத்தியில் மன்னராகவே மதிக்கப்பட்டு வந்தார். அதை விடுத்து மாநில முதலமைச்சராகும் திட்டமெல்லாம் அவருக்கு உண்மையிலேயே கிடையாது. கரீம் கானைப் போலக் கட்சி தொடங்கி வழி நடத்தும் உத்தேசமும் அவருக்கில்லை. ஆனால், தாம் செய்த தவறுக்கு ஒரு பரிகாரம் வேண்டும் என்று அவர் நினைத்திருக்க வேண்டும். அதைத் தவிர வேறு காரணங்கள் இருந்திருக்க அன்றைய சூழ்நிலையில் வாய்ப்பே இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!