Home » யுத்தங்களின் அடுத்தக்கட்டம்: எங்கே போகும் இந்த AI?
உலகம்

யுத்தங்களின் அடுத்தக்கட்டம்: எங்கே போகும் இந்த AI?

போர்களில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. 1940களில் ஆலன் டூரிங் (Alan Turing) உருவாக்கிய ‘The Bombe’ என்ற இயந்திரம் இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றி அமைத்தது.

இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிப் படகுகள் (U-boats) மூலம் அட்லாண்டிக் கடலைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஜெர்மனி. நேசப் படைகளுக்கு உணவும் தளபாடங்களும் கொண்டு சென்ற மற்ற கப்பல்கள் U-boatகளைத் தாண்டிச் சென்றதில்லை. ஓநாய்க் கூட்டங்கள் போலப் பல U-boatகள் சேர்ந்து, துல்லியமான ஒருங்கிணைப்புடன் நேசப் படைகளின் கப்பல்களை வேட்டையாடின.

இந்த ஒருங்கிணைப்புக்கு அடித்தளமாக இருந்தது ‘Enigma’ இயந்திரங்கள் அனுப்பிய ரகசியச் செய்திகள். Enigma தகவல்கள் மூலம் U-boatகள் தாக்க வேண்டிய இடத்தையும் நேரத்தையும் பரிமாறிக் கொண்டன, இந்தச் செய்திகளை இடைமறித்துக் கேட்டாலும் புரியாத அளவுக்கு அவை சங்கேதக் குறியீடுகளாய் இருந்தன. The Bombe இயந்திரம், அந்தச் சங்கேத மொழியை உடைத்து நேசப் படைகளுக்குப் பெரும் உதவி புரிந்தன. இந்த இயந்திரம் இல்லையென்றால், போர் மேலும் சில ஆண்டுகள் நீண்டிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!